பிறந்தநாள் சிறப்புக்காட்சி


50 வருசமா
எடுத்த படம்.
நானும் இன்னும் பலரும்
சேர்ந்து இயக்கியது.
போட்டுப் பார்த்தேன்.
எந்த வெட்டும் செய்யாத
காபி….
எனக்காக நானே போட்டுக்
காட்டிய பிரத்யேக காட்சி..
பிறந்தநாள்
சிறப்புக்காட்சி.
குலை நடுங்க வைத்த
கட்டங்களும்
குலுங்கிக் குலுங்கி
அழவைத்த பகுதிகளே
அதிகம்.
அத்தனையும் நானே இயக்கி
நானே நடித்தவை.
குதூகலித்து குதிக்க
வைத்த பகுதிகள்
இல்லாமலில்லை.
அத்தனையும் பிறர்
இயக்கத்தில் நான் நடித்தது.
என்னை இயக்கியவர்கள்
எல்லோருக்கும்
நன்றி!

Advertisements