என்ன செய்ய போகிறது 2014?


2013
பறித்துக் கொண்டது
கொஞ்சநஞ்சமில்லை
உற்ற மாமன் ஒருவனை
ஊதி அனைத்தது.

வழிப்படுத்தி வாழவைத்த
ஒரு மாமனிதனை
வாரி சுருட்டிக் கொண்டது.

நல்ல நண்பன் ஒருவனை
கோலம் குறைத்து
என்னை
கூனிக் குறுக வைத்தது.

நித்தம் வழியில் கண்டு
அக்கறையோடு நலம் விசாரித்த்
ஒரு அப்பாவி
நலவிரும்பியையும்
அடித்துச் சென்று விட்டது.
இனி
“அண்ணே டீண்ணே?”
உரிமையோடு கேக்க
ஆளில்லை!
அப்படி என்ன
அந்த மாற்றுத்திறனாளி
குறைவைத்தான்?
எல்லோரும் மடிப்புக் கலையாமல்
விறைப்பாக உடுத்தித் திரிய
மெலிந்த கால்களை மடக்கி
அழுந்தி அழுத்த தேய்த்தவனை

இரக்கமில்லாமல் மடக்கி கொண்டது!

இருந்தும்
இத்தனைக்கும் பிறகும்
தலையை தூக்கிக்கொண்டே
அடித்துச் செல்லும்
வெள்ளத்தில்
நீந்திப் பிழைத்திருக்க
கத்துக்கொடுத்திருக்கிறது!

கரைசேர கத்துத் தருமா?
இல்லை
கரை ஒதுக்குமா
2014?

Advertisements