நாளும் கழிகிறது…


உலகம் சலிப்பதில்லை
நித்தம் நித்தம் தன்னை
புதிது புதிதாக் காட்டுகிறது..
புதிது புதிதாக கற்று தருகிறது…
நேற்றைய சரிகள்
இன்று தவறுகளென்று
சுட்டி காட்டுகிறது…

சரி
தப்பென்று ஏற்றுக் கொண்டால்?
கடந்த காலம் சரியாகாது தான்…
ஒருவேளை
எதிர்காலம் சிறக்கலாம்.

தப்பென்று ஒத்துக்கொள்ள
இந்த நான்
இன்று மறுக்கிறதே
மறைக்கிறது
மறக்க கூட முயல்கிறது…
ஒத்துக்கொள்ள மட்டும் ம்கூம்…

நாளை ஒத்துக் கொள்ளுமோ?
இப்படித் தானே நாளும் கழிகிறது..

Advertisements

மாறவில்லை நான்!


பிடித்த கட்சி தோற்று போனது
பிடித்த அணி கோப்பையை இழந்தது..
பிடித்த அப்பா படுத்த படுக்கையாய்..
என் நேரம் சரியில்லை?

பிடித்த கட்சி
பிடித்த கொள்கையிலிருந்து விலகி நின்றது..
பிடித்த அணி
பிடித்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை…
பிடித்த அப்பா
பிடிவாத பழக்கம்

பிடித்த கட்சி..
பிடித்த அணி
பிடித்த அப்பா.
மாறிக் கொள்வார்கள்..
மாறவில்லை நான்!
மாற்றிக் கொள்ள்வில்லை
அபிமானத்தை கொஞ்சம் கூட..