பூரித்து நிற்கிறான்!


மூன்று வருட துவந்த யுத்தம்
இறுதிக் கட்டம்
பதினெட்டு நாள் போர்
ஊக்கமாக களமாடியது
அவர் மட்டுமா?
நாங்களும் மருத்துவரும்
செவிலியரும் பிறரும்..
எல்லாவற்றையும் ஏந்தினோம…
இருந்தும் பிரிந்தது உயிர்…
துவண்டு போனோம்..
தோற்றோமா?
வெற்றி தோல்வி
காணும் களமா இது.?
களமாட வேண்டியது மட்டுமே
நம் கடன்?
சரியாக களமாடுகிறோமா?
அவன் சோதிக்கிறான்…
நம் தற்காப்பு போரை
தகர்த்தெறிகிறது அவன் தாக்குதல்..
ஊக்கம் நிற்கவில்லை
அவன் உக்கிரத்திற்கு முன்னால்
தோற்றதாய் துவள்கிறோம்…
கடைசி வரை
களமாடியது கண்டு
பூரித்து நிற்கிறான்!

Advertisements

ஆடுகிறேன் நானும்!


எல்லாம் வல்லவன்
எல்லையில்லா கருணை கொண்டவன்.
அழித்தலும் அவன் அருளே!
அறியாத அரைவேக்காடுகள்
‘அடைப்பு’ அது இதுவென்கிறார்கள்
அதைச் செய் இதைச் செய்
அலைக்கழிக்கிறார்கள்…
ஊர் வாயை அடைக்க
உடன்படுகிறேன் நானும்
உள்ளம் வெந்து.

உத்தமனே!
உறுதியாக தெரியும்
ஆன்மாவை ஆட்கொண்டுவிட்டாய் நீ…
அர்த்தமற்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும்
அறியாதவர்கள் ஆடும் ஆட்டம்…
அறிந்தும் உடன்பட
ஆட்டுவிக்கிறாய்
ஆடுகிறேன் நானும்!

எல்லாம் உன் செயல்!


தளர்ந்தது உடல்
தருணம் பார்த்து பீடித்தது
தீரா ரோகம்.
சோர்ந்த்து ஆன்மா…

பிரிய மறுத்து
போராடி பார்த்தது உயிர்.
பந்த பாசம் பற்றியிருந்தது…
பந்தங்கள் நாங்களும்
கைதேர்ந்த மருத்துவர்களும்
ஆன மட்டும் துணையாக..

பெரிய மருத்துவன் அறியாததா
சமயம் பார்த்து கூறு பிரித்தான்..
ஓய்வு கொடுக்க
சோர்ந்த ஆன்மாவை
தோளில் சுமந்து சென்றான்…
பார் முதல் பூதங்களிலிலிருந்து
தந்த உடலை
பார் முதல் பூதங்களுக்குள்
இழுத்துக்கொண்டான்…

அழுது புரண்டு
இனி என்ன செய்ய
மறுபிறப்போ முக்தியோ
அவன் அளிப்பான்
ஆன்மாவுக்கு ஓய்வளித்து…

ந்ற்கதியை வேண்டி
அவன் பேரியக்கத்துக்கு
வணங்கி வழிவிட்டு
நிற்பதை விடுத்து
வேறேது கதி…

‘அழகிய பெரியவனே
எல்லாம் உன் செயல்!’

நிறுத்தி வைக்கிறான் எழுதுவதை!


அவன் எழுதும் காப்பியம்..
அதனுள் ஒரு கிளைக்கதை
கிளைக்கதையின்
தந்தை கதாபாத்திரம்
உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது..
பிள்ளைகள் பாத்திரங்கள்
தந்தை உயிருக்கு மன்றாடுகின்றன…
மன்றாட்டம் அவனை
துக்கத்தில் ஆழ்த்துகிறது.
அவன் படைத்த பாத்திரங்கள் தான்..
கிளைக்கதையை கடந்து
காப்பியத்தை தொடர வேண்டியவன்..
கொஞ்சம் நிறுத்தி வைக்கிறான்..
எழுதுவதை!