மொழிபெயர்ப்பு முயற்சிகள்….1.ஆதலினால் வெற்றி உனக்கே! .

வற்புறுத்த மாட்டேன்
உன்னை பிறழ்ந்து விடக்கூடாதென்று.
-நீ பிறழாதவளே-
அதனை அறியும் துயரத்தினிலிருந்து
என்னை விட்டு வை, விலக்கி வை!

மாசற்றவளாக இருக்க வேண்டுமென்று
அழுத்தங்களுக்கு ஆளாக்க மாட்டேன்
மூடி மறைத்துவையென்று தான் கோருகிறேன்.
ஒரு பெண் தூய்மையானவளென்று கூறிக்கொள்ள முடிந்தால்
தூய்மையானவளானது போலத் தான்…
ஒப்புக்கொண்ட குற்றமே
அவமதிப்பையும் அவமானத்தையும் ஈட்டித்தருகிறது!

பைத்தியக்காரத்தனமல்லாமல் வேறென்ன?
இரவில் சுருட்டி மறைத்தவையை
பகலில் விரித்து காட்டுவது?
ஓளித்து செய்ததை
திறந்து சொல்வது?

ரோமாபுரியின் வேசி கூட
ஒருவனுடன் கிடக்க செல்லுமுன்
கதவை தாழிட்டு கூட்டத்தை தவிர்க்கிறாள்..
நீயே உன் பாவங்களை மேலும் இழுக்குக்குள்ளாக்குவாயோ
உன்னையே குற்றம் சாட்டி விசாரனைக்குட்படுத்தி?
புத்திசாலியாகி கொள்..கற்றுக் கொள்
குறைந்தபட்சம் மாசற்ற மாதரசிகளை போல
காண்பித்துக் கொள்ள
நல்லவளென்று நம்ப வை
இல்லாத போதும்.
என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்
செய்ததை மட்டும் எப்பொழுதும் மறுதலி
பொதுவில் அடக்கம் அசிங்கமில்லை..
நெறிபிறழ அதற்கான இடங்கள் உண்டு..
அவற்றை இட்டு நிரப்பிக் கொள்
காமக்களியாட்டங்களால் ,வெட்கத்தை விட்டு!
ஆனால் முடிந்தவுடன் ஒத்திபோடு விளையாட்டுத்தனத்தை
அத்துமீறல்களை கட்டிலோடு கட்டி நிறுத்து…
அங்கே வெட்கப்படாதே ஆடையை களைந்து விட்டு
அழுத்தும் தொடையை தொடையால் ஆசையுடன் எதிர்கொள்ள!
அங்கே ஆழமான முத்தங்களைபெறு ,கொடு சிவந்த அதரங்களால்!
தாபத்தை தீர்த்துக்கொள்ள ஆயிரம் வழிகளை
அமைத்துக் கொடுக்கும் காமம்,அனுமதி!
அங்கே இன்பத்தில் தோய்ந்த வார்த்தைகளும்
முனகல்களும் ஒலிக்கட்டும் ஓயாமல்
ஆசை மேலிட்ட அசைவுகளால் நடுக்குறட்டும் மெத்தையும்!
ஆயின் ஆடைகளை திருத்தி உடுத்தும்போது சேர்த்துடுத்திக் கொள்
திருட்டுத்தனங்களை ஓளித்த ஒரு திருத்தமான முகத்தையும்
பொய்யாக நிலவும் கூச்சம் மறுதலிக்கட்டும்
அதிரவைக்கும் அத்துமீறல்களை

ஏய்த்து விடு எல்லோரையும்,
ஏய்த்த் விடு என்னையும்,
ஆழ்த்தி விடு அறியாமையில்
அனுபவிக்க விடு என்னை
ஒரு மகிழ்ச்சியான முட்டாளைப்போல
நானெதற்கு தொடர்ச்சியாக காண வேண்டும்
பரிமாறிக்கொள்ளப்படும் கடிதங்களை?
நானெதற்கு காண வேண்டும்
இரு குழிவுகளை மெத்தை மீது?
உறக்கத்தால் மட்டுமே ஆக முடியாத
மேலதிகம் கலைந்த கூந்தலை?
நானெதற்கு காண வேண்டும்
கழுத்தில் தடம் பதித்த காமக்கடிகளை!

மறைப்பதைத் தவிர எல்லாம் செய்கிறாய்
உன் அத்துமீறல்கள் முகத்தில் அறைகின்றன..
என்னை நினைத்து பார்
உன் பேரைப் பற்றிய கவலையை விடு!
என மதியை இழக்கிறேன் , மாய்கிறேன்..
உன் பாவங்களை ஒத்துக்கொள்ளும்போது
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஊத்துகிறது வியர்த்து
அந்த கணத்தில் உன்னை ஒருசேர
விரும்பவும் வெறுக்கவும் செய்கிறேன்-மொன்னைத்தனம்!
என்ன செய்ய ,உன்னை நேசிக்கிறேனே!
நான் செத்திருக்க கூடாதா- நீயம் தான்?
நீ எதை மறைக்க முயன்றாலும் ஆய்ந்தறியவோ
உய்த்தறியவோ முயல மாட்டேன்..
ஏமாற்றப்படுவதில் நன்றியுடன் அமைதி கொள்வேன்
கையும் களவுமாக பிடிபட நேர்ந்தாலும்
தாழ விழுவதை காண நேரிட்டலும்
நான் கண்டிருந்த காட்சியாய் இருப்பினும் மறுதலி!
என் கண்கள் உன் கூற்றை ஏற்கும்
எளிதாக கிட்டும் வெற்றிப் பரிசு தோற்க விரும்புபவனிடமிருந்து
‘ நான் அதை செய்யவில்லை’ என்று சொல்ல மட்டும் நினைவிருந்தால்
ஒற்றை சொற்றொடரில் வெற்றி கொள்ள முடிவதால்
அபார வெற்றி உனக்கு,
நீதிபதியால்! உன் வழக்கால் இல்லாவிடினும்!

ஆங்கில மூலம்:

“On fidelity” by Ovid
I don’t ask you to be faithful – you’re beautiful, after all –
but just that I be spared the pain of knowing.
I make no stringent demands that you should really be chaste,
but only that you try to cover up.
If a girl can claim to be pure, it’s the same as being pure:
it’s only admitted vice that makes for scandal.
What madness, to confess by day what’s wrapped in night,
and what you’ve done in secret, openly tell!
The hooker, about to bed some Roman off the street
still locks her door first, keeping out the crowd:
will you yourself then make your sins notorious,
accusing and prosecuting your own crime?
Be wise, and learn at least to imitate chaste girls,
and let me believe you’re good, though you are not.
Do what you do, but simply deny you ever did:
there’s nothing wrong with public modesty.
There is a proper place for looseness: fill it up
with all voluptuousness, and banish shame;
but when you’re done there, then put off all playfulness
and leave your indiscretions in your bed.
There, don’t be ashamed to lay your gown aside
and press your thigh against a pressing thigh;
there take and give deep kisses with your crimson lips;
let love contrive a thousand ways of passion;
there let delighted words and moans come ceaselessly,
and make the mattress quiver with playful motion.
But put on with your clothes a face that’s all discretion,
and let Shame disavow your shocking deeds.
Trick everyone, trick me: leave me in ignorance;
let me enjoy the life of a happy fool.
Why must I see so often notes received – and sent?
Why must I see two imprints on your bed,
or your hair disarrayed much more than sleep could do?
Why must I notice love bites on your neck?
You all but flaunt your indiscretions in my face.
Think of me, if not of your reputation.
I lose my mind, I die, when you confess you’ve sinned;
I break out in cold sweat from hand to foot;
I love you then, and hate you – in vain, since I must love you;
I wish then I were dead – and you were too!
I won’t investigate or check whatever you try
to hide: I will be thankful to be deceived.
But even if I catch you in the very act
and look on your disgrace with my own eyes,
deny that I have seen what I have clearly seen,
and my eyes will agree with what you claim.
You’ll win an easy prize from a man who wants to lose,
only remember to say, ‘I didn’t do it.’
Since you can gain your victory with one short phrase,
win on account of your judge, if not your case.

2. சுதந்திரனானேன்…

என் கதையை சொல்ல யத்தனித்தேன்..
அலையலையாய் மோதிய துக்கம்
தொண்டையை அடைத்தது,,,
ஒரு சொல்லை உதிர்த்துவிட முயன்றேன்
ஆனால் என் எண்ணங்கள்
வழுவிழந்து நொறுங்கின
கண்ணாடியைப் போல..
பெருங்கலமும் கவிழ்ந்து போகும்
அன்பெனும் ஆர்ப்பரிக்கும் ஆழியில்
என் சிறு படகெந்த மூலைக்கு..
உடைந்து நொறுங்கியது
ஒரு சிறு துண்டை மட்டும்
நான் பற்றிக் கொள்ள அனுமதித்து..
சின்னதாய் மிகச்சின்னதாய அநாதரவாய்
சொர்க்கத்துக்கு ஏகுகிறேன்
அன்பின் ஒரு அலையில் உயர்ந்து
அடுத்த அலையில் தாழ்ந்து..
எனக்கே தெரியவில்லை
நான் இருக்கிறேனா? இல்லையா?
இருப்பதாக நினைக்கும் போது
மதிப்பற்றவனாக உணர்கிறேன்..
இல்லையென்று நினைக்கும்போது
என் மதிப்பைக் கண்டுகொள்கிறேன்..
என் எண்ணங்களை போலவே
நித்தம் நித்தம் மரிக்கிறேன் எழுகிறேன்
உயிர்த்தெழுவதை
நான் எப்படி சந்தேகிக்க இயலும்?
பூவுலகில் அன்பைத் தேடி
களைத்து கடைசியில் சரண்புகுந்தேன்
அமிழ்ந்தேன் பேரன்பெனும் பள்ளத்தாக்கில்
சுதந்திரனானேன்…

ஆங்கில மூலம்:

I was going to tell you my story
but waves of pain drowned my voice.
I tried to utter a word but my thoughts
became fragile and shattered like glass.
Even the largest ship can capsize
in the stormy sea of love,
let alone my feeble boat
which shattered to pieces leaving me nothing
but a strip of wood to hold on to.
Small and helpless, rising to heaven
on one wave of love and falling with the next
I don’t even know if I am or I am not.
When I think I am, I find myself worthless,
when I think I am not, I find my value.
Like my thoughts, I die and rise again each day
so how can I doubt the resurrection?
Tired of hunting for love in this world,
at last I surrender in the valley of Love and become free.
~ Rumi

3.நானே உயிர்…

எனக்கு பெயரில்லை
நான் தூயவன்
மலைகளிலிருந்து வீசும்
காற்றைப் போன்றே…
எனக்கென்றோர் வசிப்பிடமில்லை
ஓடித் திரிகிறேன்
பாயும் நதிநீரைப் போன்றே…
கருத்த கடவுளர்களைப் போன்று
கர்ப்ப கிருகங்கள் எனக்கில்லை
பெருங்கோயில்களின் இருண்ட நிழல்களும்
எனக்கான இடமில்லை
எனக்கான புனித நூல்களுமில்லை
பாரம்பரியத்தால் பக்குவப்பட்டவனுமில்லை
உயர் மாடங்களில் கொளுத்தப்பட்ட
ஊதுபத்திகளில் இல்லை நான்
சடங்குகளின்
சீரிய சிறப்பிலும் இல்லை நான்
வடிக்கப்பட்ட பிரதிமையிலும் இல்லை
இனிமையாக துதிக்கும்
குரலிலும் இல்லை நான்..

கட்டுப்பட்ட்வனல்ல கோட்பாடுகளால்
மாசுபட்டவனுமல்ல நம்பிக்கைகளால்
அடிமைப்ப்பட்டவனல்ல மதங்களுக்கும்
அவற்றின் குருமார்களின் தூய துயரங்களுக்கும்
சிக்குண்டவனல்ல அவர்களின் தத்துவங்க்ளுக்குள்ளும்
அவர்களுக்கிடையேயான பிரிவினைகளுக்குள்ளும்

உயர்ந்தவனோ தாழ்ந்த்வனோ அல்லன்.

நானே துதிப்பவனும் துதிக்கப்படுபவனும்.
நான் சுதந்திரமானவன்..
என் பாட்டு
பாயும் நதியின் பாட்டு
பரந்து விரிந்த கடலை
கூவி அழைக்கும்
நதியின் பாட்டு!

திரிகிறேன் திரிகிறேன்
எங்கும் என் போக்கில்
நானே உயிர்!

ஆங்கில மூலம:

I have no name,
I am as the fresh breeze of the mountains.
I have no shelter;
I am as the wandering waters.
I have no sanctuary, like the dark gods;
Nor am I in the shadow of deep temples.
I have no sacred books;
Nor am I well-seasoned in tradition.
I am not in the incense
Mounting on the high altars,
Nor in the pomp of ceremonies.
I am neither in the graven image,
Nor in the rich chant of a melodious voice.
I am not bound by theories,
Nor corrupted by beliefs.
I am not held in the bondage of religions,
Nor in the pious agony of their priests.
I am not entrapped by philosophies,
Nor held in the power of their sects.
I am neither low nor high,
I am the worshipper and the worshipped.
I am free.
My song is the song of the river
Calling for the open seas,
Wandering, wandering,
I am Life.
-J.K.

4 எப்படி நேசிக்கிறேன் நானுன்னை

எப்படி நேசிக்கிறேன் நானுன்னை..
எண்ணி பார்க்கட்டுமா
எப்படியெல்லாமென்று…

.நேசிக்கிறேன் நானுன்னை..
ஆழ, அகல உயரத்திற்கு
ஆன்மா எட்டும்
ஆழ அகல உயரத்திற்கு…
பார்வைக்கு அப்பால்
பார்க்கிறேன் துழாவி..
ஆன்மாவின்
அன்பின் ஓரங்களை… ..
எதற்கு சிரமம்..
அகல நீட்டிவிடுகிறேன்
இருகைகளையும் இருபுறமும்..

நேசிக்கிறேன் நானுன்னை
அன்றாட வாழ்வின்
இயல்பான தேவைக்காக
பகலிலும் இரவிலும்.

நேசிக்கிறேன் நானுன்னை
சுதந்திரமாய்
மானுட உரிமையாய்..

நேசிக்கிறேன் நானுன்னை
பரிசுத்தமாய்
பாராட்டுகளிலிருந்து விலகி..

நேசிக்கிறேன் நானுன்னை
பழைய காயங்களிலிலிருந்து
திருப்பி விடப்பட்ட தாபத்துடன்..
சிறுவயது அர்ப்பணிப்புடன்..

நேசிக்கிறேன் நானுன்னை
நேசத்தையெல்லாம்
நம்பி ஏமாந்த
நேசத்தையெல்லாம் குவித்து

நேசிக்கிறேன் நானுன்னை
உயிர்மூச்சால்
என் மென்னகையால்
கண்ணீரால்
என் உயிரின் எல்லாமால்.

நேசிப்பேன் நானுன்னை
இன்னும் ஆழமாய்
அவன்மட்டும் அருளினால்
இன்னும் ஆழமாய்
மரணத்திற்கு அப்பாலும்..

மூலம்:
How Do I Love Thee?” by Elizabeth Barrett Browning
How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of Being and ideal Grace.
I love thee to the level of every day’s
Most quiet need, by sun and candlelight.
I love thee freely, as men strive for Right;
I love thee purely, as they turn from Praise.
I love with a passion put to use
In my old griefs, and with my childhood’s faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints, — I love thee with the breath,
Smiles, tears, of all my life! — and, if God choose,
I shall but love thee better after death.

5. நானறிவேன் கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று…

சுதந்திர பறவை
காற்றின் முதுகிலேறி
மிதக்கிறது வீசுதிசையில்
காற்றோட்டம் தணியும் வரை.
மஞ்சள் வெயிலில்
இறக்கைகளை நனைத்து
துணிகிறது தனதாக்க வானை!

ஆனால் கூண்டுப்பறவை-
குறுகlலான கூண்டுக்குள்
மருகும் கூண்டுப்பறவை
காண இயலாது
மறிக்கும் கோரத் தடைகளினூடே.
இறக்கைகள் வெட்டப்பட்டுவிட்டன,
கால்கள் கட்டப்பட்டுவிட்டன,
அதனால் திறக்கிறது
குரல்வளையை பாட!

கூண்டுப்பறவை பாடுகிறது
மிரட்சியின் அதிர்வுகளொலிக்க…
அறிந்திராதவைகளை
ஆனால் தணியாத
நெடுநாள் ஏக்கங்களை..
ஒலிக்கிறது அதன் ராகம்
தூரதூர மலைகளில்
சுதந்திர தாகமானதால்
கூண்டுப்பறவையின்
சுதந்திரர ராகமானதால்.!

சுதந்திர பறவை எதிர்நோக்குகிறது
இன்னுமொரு தென்றலை,
பெருமூச்செறியும் மரங்களினூடே
மென்மையாக வீசும் காற்றை,
ஓளிவீசும் புல்வெளியில் மண்டிக் காத்திருக்கும்
கொழுத்த புழுபூச்சிகளை.
அது வானில் பொறித்து கொண்டது
அதன் பேரை!

ஆனால் கூண்டுப்பறவை
உறைந்து நிற்கிறது
கனவுகளின் கல்லறையில்..
அதன் நிழல் பீதியில் கத்துகிறது
துர்க்கனவின் அலறலைக் கேட்டு..
இறக்கைகள் வெட்டப்பட்டுவிட்டன,
கால்கள் கட்டப்பட்டுவிட்டன,
அதனால் திறக்கிறது
குரல்வளையை பாட!

கூண்டுப்பறவை பாடுகிறது
மிரட்சியின் அதிர்வுகளொலிக்க…
அறிந்திராதவைகளை
ஆனால் தணியாத
நெடுநாள் ஏக்கங்களை..
ஒலிக்கிறது அதன் ராகம்
தூரதூர மலைகளில்
சுதந்திர தாகமானதால்
கூண்டுப்பறவையின்
சுதந்திர ராகமானதால்!

ஆங்கில மூலம்:
I Know Why The Caged Bird Sings ~ by : Maya Angelou
The free bird leaps
on the back of the wind
and floats downstream
till the current ends
and dips his wings
in the orange sun rays
and dares to claim the sky.
But a bird that stalks
down his narrow cage
can seldom see through
his bars of rage
his wings are clipped and
his feet are tied
so he opens his throat to sing.
The caged bird sings
with fearful trill
of the things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill for the caged bird
sings of freedom
The free bird thinks of another breeze
and the trade winds soft through the sighing trees
and the fat worms waiting on a dawn-bright lawn
and he names the sky his own.
But a caged bird stands on the grave of dreams
his shadow shouts on a nightmare scream
his wings are clipped and his feet are tied
so he opens his throat to sing
The caged bird sings
with a fearful trill
of things unknown
but longed for still
and his tune is heard
on the distant hill
for the caged bird
sings of freedom.

Advertisements

‘பெரிய மனுசங்க’


காலை மணி 7.40
அவன் அப்பாவின் உயிர் பிரிந்திருந்தது…
80 வயதானவர்.. நீண்ட போராட்ட்த்திற்கு பிறகே உயிரை அவராக விட்டிருந்தார்..
அந்த கணம் …எல்லாவற்றையும் கடந்திருந்த கணம்…
அதுவரை சுமந்த கனமெல்லாம் கரைந்திருந்தது..
அடுத்து அவன் செய்யப்போவதெல்லாம் அவன் அப்பாவுக்கு உதவாது
அவர்களுக்கும் உதவாது…

எல்லாம் அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் விருப்பத்திற்கேற்ப
செய்து முடிக்க வேண்டும்..
சீரும் சிறப்புமாய் தூக்கிப் போட்டார்கள் என்றொரு
அவசியமேயில்லாத நற்சான்றிதழை(?) பெற்றாக வேண்டும்..
நிர்ப்பந்தம்…

இருக்கும் வரை எட்டிப் பார்க்காதவர்கள்
விமர்சிக்கும் உரிமைகளை எப்படிப் பெறுகிறார்கள்.. தெரிவதில்லை..
அப்பாவின் இழப்பை உணர்ந்தவர்களும்,இழப்பால் ஏற்பட்ட அவர்களின் துக்கத்தை உணர்ந்து உண்மையில் வேதனைப்பட்டவர்களும் காரியமாற்ற,காரியத்தை முடிவுக்கு கொண்டு வர முன்வந்தார்கள்..
அவர்கள் கூட எடுத்துக் கொள்ளாத உரிமைகளை சில ‘பெரிய மனிதர்கள்’’ எப்படிக் கூசாமல் பறித்துக் கொள்கிறார்கள் புரிவதில்லை…
உயிர் பிரிந்த சில மணித்துளிகளுக்குள் ஒருவர் ஆரம்பித்து விட்டார்…
‘எல்லா சன்னல்களையும் கதவுகளையும் திறந்து விட்டுருங்கப்பா…
ஆன்மாவை பிடிச்சு வைக்க கூடாது…’
-ஒன்பது வாசல் கொண்ட உடமபை விட்டு பிரித்து எடுத்துச் சென்று விட்டான் பெரியவன்
கதவுகளா மறித்து விடும் இருக்க விடுவதும் கூறு பிரிப்பதும் கூற்றானவன் இஷ்டப்படி தானே-
‘வழி விடணும் சாமான்களை வாங்கீட்டு வாங்க…’ அதற்குள் இன்னொருத்தர்…
‘ஐஸ் பெட்டிக்கு சொல்லியாச்சா…’ இன்னுமொருத்தர்..
நல்ல வேளை அவன் தாய்மாமனும் சித்தப்பனும் இருந்தார்கள் பொறுப்பேற்றுச் செய்ய…
அவர்களையும் வம்புக்கிழுத்தார்கள் அந்த பெரிய மனிதர்கள்…
சித்தப்பனுடனும் தாய்மாமனுடனும் உள்ள உட்பகையை தீர்த்துக்கொள்ள் அவன் வீட்டு துக்க நிகழ்வை இரக்கமில்லாமல் களமாக்கிக் கொண்டார்கள் எப்படித்தான் முடிகிறதோ?
கொடுத்தும் உதவ மாட்டார்கள் உடலுழைப்பையும் பங்களிப்பாக தர மாட்டார்கள்..
ஆனால் அவர்களின் அக்கறையில்லாத ஆட்டங்களுக்கு முக்கியத்துவம் கோருவது
அவர்களுக்கு அசிங்கமாக ஏனோ தெரியவில்லை..
இத்தனைக்கும் சித்தப்பனும் தாயமாமனும் 60 வயதைக் கடந்தவர்கள்..அவனுக்கே கூட 50க்கு மேலாகி விட்டது..
இருந்தும் அவர்கள் அறியாச் சிறுவர்களாம் ?
தாய் வழியில் மாமன் தந்தை வழியில் சித்தப்பன்
இவர்கள் இருந்தே இந்தப்பாடு.. இல்லாதவர்கள்?

ஆளுக்கொரு திசையில் பிரிந்தார்கள் கூடி அழ ஒரு நிமிடம் கூட கிடைக்காத அவனும் அவன் தம்பியும்..
அவுங்க அம்மா?
பாவம் அவுங்களும் ஒரு வேலையை கையில் எடுத்துகொண்டார்கள்.. துக்கத்தை ஒத்திவைத்து….
எப்படி முடிந்ததோ?
அப்பாவின் டையரி…
எல்லா உறவினர்களின் முகவரிகளையும் கைபேசியின் எண்களையும் குறித்து வைத்திருந்தார்..
ஒவ்வொருத்தராக தொடர்பு கொண்டு தகவலைச் சொல்ல சொல்ல
அடுத்த கேள்வி
‘எப்ப எடுக்க போறீங்க?’
-ஆமா எப்போ?-
வேறு வழியில்லாமல் ‘பெரிய மனிதர்களை’ அணுகி கேட்க
‘இன்னைக்கு வியாழக்கிழமை.. குளிகை காலையிலேயே முடிஞ்சுருது அதுனால் ஆளுங்க வந்துட்டாங்கன்னா எடுத்துரலாம்…’
சாயங்காலமா இருட்டிறதுக்கு முன்னாடி எடுத்துட்டா நல்லது…’
அதற்கிடையில் சென்னையில் இருந்து ஒரு அழைப்பு அவன் கைபேசிக்கு.
பகுமானம் பிடிச்ச உறவினர்…
‘எப்ப எடுக்க போறீங்க..?
‘இருங்க இன்னும் தெளிவாகலே’
‘சொன்னாத் தானே நான் கிளம்ப முடியும்’
மணியைப் பார்த்தான் 8.30 ஆகியிருந்தது…
-இப்ப கிளம்பினாக் கூட 3.30 மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்துரலாமே
கேக்குறான் பாரு கேள்வியா? இவன் வந்தாலென்ன வராவிட்டாலென்ன?
அப்பா காரியம் ஆத்திரப்படாத…அம்மா சொன்னது ஆத்திரத்தை அடக்க் வைத்தத்து-
‘சொல்லுறேங்க….’
‘நீ சொன்ன பிறகு தான்…’

அடுத்த அழைப்பு-இது அவன் தம்பி
‘டேய் மாநகராட்சியில் பணம் கட்ட நிக்கிறேன்…எத்தனை மணிக்குன்னு கேக்குறாங்கடா’
‘ஆறு மணின்னு சொல்லுடா பார்த்துக்கலாம்…’
ஐஸ் பெட்டி வந்திருந்தது…
அப்பாவின் கால்களை சேர்த்து கட்ட வேண்டும்.. நாடியை தாங்கி ஒரு கட்டு…இல்லைன்னா வாய் பிளந்துக்கும்…..கைகளை சேர்த்து வைத்துக் கட்ட வேண்டும்…
மல்லுத்துணியும் வாங்கி வந்திருந்தார்கள் வழி விட சாமான் வாங்கச் சென்றவர்கள்..
எல்லாம் குடும்ப நாவிதர் செய்ய வேண்டியது…இப்ப அப்படியெல்ல்லாம் இல்லையே..
உற்ற நண்பர்கள் சிலர் முன் வந்து செய்து முடித்தனர்..
திருத்தமாகவே செய்து ஐஸ் பெட்டிக்குள் அப்பாவை வைத்தனர்..
ஆளுயர மாலைய்ணிவித்திருந்தார்கள்.. அவனுக்கு நெஞ்சு வலித்தது…
எங்கு சாவு விழுந்தாலும் ஓடியோடி இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ததில் பழகியிருந்தார்கள்…
அவர்கள் ஒதுங்க
பெரிய மனிதர்களின்(பெரிய மனுசிகளும் அடங்குவர்) வழிகாட்டுதலில் வழி விடும் சடங்கை நடத்தி முடித்தார்கள்..
அவர்கள் என்ன வழி விடுவது…
அழகிய பெரியவன்தான் அகண்ட தோள்களில் எப்போதோ சுமந்து சென்று விட்டானே
கூட்டம் வர ஆரம்பித்தது…
ஆளுக்கொரு பக்கம்…
வந்தவர்களுக்கெல்லாம் எப்படி? எப்போ?
என்ற கேள்விகளுக்கு விம்மல் விசும்பலுடன் பதிலிறுத்துகொண்டு….
சமூகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு இசைந்து கொடுத்துக் கொண்டிருநதார்கள்….
ரெண்டு கார் ஷெட் உள்ள வீடு…
இருந்தும் கொட்டகை போட வைத்தார்கள்..
அதிலும் சாமியானாவா? கொட்டகையா? என்ற விவாதத்துக்கு பிறகே…
கொட்டகைக்கு கருமாதி வரை ஒரே வாடகை தான் என்பதால் அதையே போடுவது என்று முடிவானது..
‘கருமாதி முடிஞ்ச கையோடு பொத்து விட்டுரணும்…’
-யோவ் கருமாதி எப்பன்னே இன்னும் யோசிக்கலை- மனசுக்குள் அவன்..
சேர் வந்தது..கொட்டகை முடிந்தது..
டீ பிஸ்கட்…கூல்டிரிங்க்ஸ் அது பாட்டுக்கு அது ஒரு பக்கம்…
எதுவுமே சாப்பிடாமல் ஒரு வயதான ஆள் மணியடித்துக்கொண்டு அப்பப்ப சங்கை ஊதிக்கிட்டு
-சலிக்காமல் எப்படி… இந்த ஆளுங்கல்லாம் இன்னும் இருக்காங்களா.. நல்லா கவனிச்சு அனுப்பணும்–
அவனது கவனத்தை கலைத்தார் ஒரு ‘பெரிய மனுசன்’
‘ஏம்பா பாடை கட்டப் போறீங்களா ரதமா…?’
‘இல்லைங்க ஆம்புலன்ஸ் தான் அதுக்கே இரண்டாயிரங்க…’-அவன்..
‘என்னப்பா உங்க அப்பா எப்படி வாழ்ந்த ம்னுசன் நல்ல பூப்பல்லக்கா கட்டுங்கப்பா…’
-ஆமா அவர் வாழ்ந்தப்பா அள்ளிக் கொடுத்துட்டாரு…இப்பக் கூட செலவுக்கு ஏதும் வேணுமான்னு ஒரு முறைக்காக கூட கேட்காத ‘பெரிய மனுசன்.’..
‘இல்லைங்க கட்டுற ஆளுங்க கிடைக்கிறது கஷ்டம்…தவிர சுடுகாடு 2.கிமீ..’
‘என்னமோப்பா சொல்லுறத சொல்லிட்டேன்…’
‘நானும் பார்த்துக்கிட்டேயிருக்கேன் இந்த கடிகாரத்தை யாரும் நிறுத்த மாட்டேங்குறீங்க் இன்னொரு ‘பெ.ம’…’
-ஏன் அதென்ன பண்ணுச்சு-
‘சரி..சரி நிறுத்தீறுடா…’
ஓடி நிறுத்தி உதவினான் ஒரு நண்பன்…
‘ஆமா நீர்மாலை எங்கேயிருந்து…?’
அந்த காலத்துல இறந்த சொந்தங்களை குளிப்பாட்டி சீவி சிங்காரிச்சு சாமியைப்போல ஊர்வலமாக கொண்டு போயிருக்காங்க…
ஆறு இருந்துச்சு ..கிணறு இருந்துச்சு.. போய் தண்ணீரை பங்காளிகளோட எடுத்து வந்தாங்க…
இன்னைக்கு ஆறு, குளம் எங்கே… குட்டை கூட கிடையாதே…
‘அடுத்த முச்சந்தியில் மாநகராட்சி சின்டெக்ஸ் தொட்டி இருக்குண்ணே.. கேட்டுருக்கோம்..‘அங்கெ இருந்து தான்..’
‘சரி சரி….ஆளுங்க வந்துட்டாங்கன்னா ஆரம்பிச்சுரலாம்ல’
‘இருங்க கேட்டுக்கறேன்…’
‘என்னடா ஆரம்பிச்சுராலாமா?’-அவன் தம்பி..
‘ஆறு மணின்னு சொல்லிட்டோம் மூணு மணிக்கே ஆரம்பிச்சா எப்ப்டிறா?’
‘எல்லாம் முடிச்சு எடுக்க சரியாயிருக்கும்.. இப்ப ஆரம்பிச்சா தான் சரியா இருக்கும்..’- மாமா
‘வர வேண்டியவங்கல்லாம் வந்துட்டாங்களா பாருடா…’
‘அந்த பகுமானம் பிடிச்ச உறவுக்கூட்டம் இன்னும் வரலைடா..’
‘எங்க வர்றாங்கன்னு கேளுங்கப்பா..’
‘துவரங்குறிச்சிக்கிட்ட வர்றாங்களாம்..’
‘அப்புறமென்ன…ஆரம்பிங்கப்பா..’
-கூட்டம் கலைஞ்சுட்டா நல்லா இருக்காது …சரி ஆனது ஆகட்டும்- முடிவுக்கு வந்தான் அவன்..
ஆரம்பமானது..
-ஆண்களும்பெண்களும் அடுத்த தெருவுக்குப் போயி குளிச்சுட்டு தண்ணீய எடுத்துட்டு வந்தார்கள்..
புதுசு புதுசா பித்தளையில் செம்பும் குடமும் வாங்க வைத்திருந்தார்கள்..
அவனுக்கு உடன்பிறந்த சகோதரிகள் இல்லை ..அந்த ஸ்தானத்தில் எடுப்பவர்களுக்கு ஒரு புது அண்டா அது நிறைய அரிசி கோடியுடை பலகாரமெல்லாம் போகும்போது செய்யவேண்டும்.. கிழிஞ்சுரும்-
ஈர வேஷ்டியுடன் மாலையணிந்து வந்து காத்திருந்தார்கள்..
வீட்டிற்கு முன்னால் வாட்கைக்கு ஏற்பாடுசெய்திருந்த பெஞ்சுகளை அடுக்கி மேடை கட்டி அவன் அப்பாவைக் கிடத்தியிருந்தார்கள்..
முன்னெல்லாம் சவரம் செய்து குளிப்பாட்டுவார்கள்..
ஐஸ் பெட்டியில் வச்ச உடம்பு மடங்காது… சும்மா தலைக்கு எண்ணெய்வச்சு தண்ணி தெளிச்சு முடிச்சுட்டாங்க..
அவன் அம்மாவ வேற பக்கத்தில் உடகார வச்சு..
அப்பா கையால் தலையில் எண்ணெய் தடவி.. கொடுமைங்க..
அப்பாவுக்கு கோடிவேட்டி…அம்மாவுக்கு கோடிச் சேலை
அதுலயும் நா முந்தி நீ முந்தி .. சண்டையெ போட்டுக்கிட்டாங்ய..
என்ன முறையோ..
அப்பாகிட்ட யிருந்து சீதையை வாங்கச் சுத்தி வந்தார்கள்..
மரக்கால் நெல்,அப்புறம் படி நெல் ,அதுங்க மேல் விளக்கு..
சுத்தி வந்து வாங்கிக்கிட்டார்கள் அவனும் அவன் தம்பியும்..
அந்த காலத்து சொத்தெல்லாம் விதை நெல்லு தானெ..
நெல்லு உயிருடையது…அரிசியை விதைக்க முடியாது…
விளக்கு எப்பவுமே துக்கம் போக்குற நம்ப்கை ஒளி ஊட்டுறதுக்கான் சடங்கு…
கடைசியில் ஒரு காரியம் பண்ணினாங்க …ரொம்ப கொடுமைங்க..
அவன் அம்மா கழுத்திலிருந்து மஞ்சள் கயிற்றை கழட்டி அவன் அப்பா காலில் கட்டிவிட்டுட்டாங்க..
சங்கொடிஞ்சுருச்சு…அவனுக்கு!
55 வருசம் கூட வாழ்ந்த பொம்பளை ..அவங்க இஷ்டப்பட்ட அன்னைக்கு அவங்களா கழட்டிக்க விடக் கூடாதாங்க? இல்ல அவரு நினைப்பா கழுத்தில கிடந்தாத் தான் என்னங்க..
அடுத்து நடந்த்திலெல்லாம் அவனும் அவன் தம்பியும் முழு நினைவோட கலந்துக்கலை
ஆம்புலன்ஸில எடுத்துட்டுப்போயி முடியெடுத்து கொள்ளி வச்செதெல்லாம் லேசுபாசாத்தான் நினைவிலிருந்தது
அங்கெயும் சிண்டெக்ஸ் தொட்டி தான்.. குளிச்சுட்டு வீடு வந்து சேர்ந்தான் எப்படியோ..?
ஏற்பாடு செய்த பலகாரத்தை சாப்பிட்டுவிட்டு சொந்த பந்தமெல்லாம்( ஒரு சிலரைத் தவிர)..கிளம்ப பத்தாயிடுச்சு..
அதுக்கப்புறம் தாங்க அவுங்க கூடி அழுக முடிஞ்சுது…
அன்றிரவு அவன் உறங்காத்து அப்பாவின் இழப்பு தந்த துயரத்தினால கூடஇல்லை..
உண்மையில் அவன் தூங்காத்து.. இரண்டாம் நாள் சாஸ்திரம், செம்பும் தண்ணியும், கருமாதி, முப்பதுக்கு என்று வரப்போகும் சடங்குகளை எப்படி கடக்கபோகிறோம் என்ற அச்சத்தினால!