வரட்டும் 2015!


2014….
ஆசையாய் அதை
அசை போட முடியாது.
அது
உயிர் தந்தவனை
பறித்துக்கொண்டது…
உயிரையும் உறிஞ்சியிருக்கலாம்..
உருவம் தந்தவளுக்காக
விட்டு விட்டது?

சென்றதில் நின்று
வருவதை எதிர்நோக்க
நடுக்குறுகிறது …

வறழ்கிறது நாக்கு
கமறுகிறது தொண்டை
தளர்கின்றன தோள்கள்
தவிக்கின்றன கைகள்
தடுமாறுகின்றன கால்கள்
இருள்கின்றன கண்கள்…

அடர் இருளில்
ஒரு புள்ளி வெளிச்சம்
இருளைக் கிழித்து
வீசு புயலைக் கடந்த
அதனால்
சற்றே ந்டுங்கும் ஒளிக்கற்றை
எங்கோ ஆழத்திலிருந்து…
மெல்ல மெல்ல
நடுக்கம் தீர்ந்து
நிலை கொள்கின்றது
நட்சத்திராமாய்….
சென்றவனின் கனவு..

வழிகாட்டும்
இனியவன் கனவு…
வரட்டும் 2015!