இண்டுகளும் இடுக்குகளும்…


இண்டுகளும் இடுக்குகளும்
இதயத்தினுள் இருப்பது
இழக்கும் வரை
இணையை
இழக்கும் வரை
தெரிவதில்லை
தெரிந்தபின்
இண்டுகளும் இடுக்குகளும்
அகண்டு வீதிபெருக்கி
வீதிகளும் சாலைகளுமாய்…
இதுவும் சரிதான்,
இருக்கும் காலத்திற்கு
சுற்றித் திரிய
வெளி வேண்டுமே!

Advertisements