கண்ணாடி.


நான் பளீர் வெள்ளி
முழுமையானவள், எனக்கில்லை முன்முடிவுகள்.
எதைக் கண்டாலும் உடனடியாக முழுங்கிக்கொள்கிறேன்
உள்ளது உள்ளபடியே, விருப்பு வெறுப்பால் சிதைவுறாமல்.
நான் குரூரமானவல்லள், உண்மையானவள் மட்டுமே.
நான்கு முனை படைத்த சிறு தெய்வத்தின் கண்,
முக்கால்வாசி நேரம் எதிர்சுவற்றில் முழுகவனத்தை குவித்தே.
அது மென் சிவப்பு நிறம்,அங்கங்கே கொஞ்சம் புள்ளிகளுடன்.
நெடுங்காலம் அதை கவனித்திருக்கிறேன்.
அது என் இதயத்தின் ஒரு பகுதி ,ஆனால் அது அடிக்கடி மினுங்கும்.
முகங்களும் இருட்டும் எங்களை அடிக்கடி பிரிக்கும்.

இப்பொழுது நானொரு ஏரி. ஒரு பெண் என் மேல் வளைகிறாள்,
என்னுடைய ஆழங்களில் தேடுகிறாள் அவள் இயல்பை
அதன் பின் திரும்புகிறாள் அந்த
மெழுவர்த்திகள் அல்லது சந்திரன்,-

பொய்யர்கள் ,அவர்களிடம்
நான் அவளை எதிர்கொண்டு பார்க்கிறேன்
மேலும்விசுவாசமாக பிரதிபலிக்கிறேன் பிம்பத்தை.
எனக்கு பரிசளிக்கிறாள் கண்ணீரால், பதறும் கைகளால்.
நான் முக்கியம் அவளுக்கு. அடிக்கடி வந்து போகிறாள்.
ஒவ்வொரு காலையும் அவள் முகமே இருட்டை விலக்குகிறது.
என்னில் முழுகினாள் சின்னஞ்சிறு பெண்ணாக
என்னில் எழுகிறாள் ஒரு மூப்பெய்திய பெண்
அவளை நோக்கி நாளுக்கு நாள,அச்சமூட்டும் மீனைப்போல.

இது மொழிபெயர்ப்பு முயற்சியே!

ஆங்கில மூலம்:

Mirror

by Sylvia Plath

I am silver and exact. I have no preconceptions.
Whatever I see I swallow immediately
Just as it is, unmisted by love or dislike.
I am not cruel, only truthful ‚
The eye of a little god, four-cornered.
Most of the time I meditate on the opposite wall.
It is pink, with speckles. I have looked at it so long
I think it is part of my heart. But it flickers.
Faces and darkness separate us over and over.

Now I am a lake. A woman bends over me,
Searching my reaches for what she really is.
Then she turns to those liars, the candles or the moon.
I see her back, and reflect it faithfully.
She rewards me with tears and an agitation of hands.
I am important to her. She comes and goes.
Each morning it is her face that replaces the darkness.
In me she has drowned a young girl, and in me an old woman
Rises toward her day after day, like a terrible fish.

Advertisements

உருவகங்கள்!


நானொரு ஒன்பது அசை புதிர்,
ஒரு யானை, ஒரு கனத்த வீடு
தளிர்க்கால்களில் உலாவும் முலாம்பழம்
ஒ சிவந்த பழம், தந்தம், உயர்மரச்சட்டங்கள்!
இந்த ரொட்டி பெரிது புரையூட்டலின் உப்பலால்.
புதிதாக அடித்த காசு இந்த தடித்த பணப்பையில்.
நானொரு வழி, ஒரு மேடை, சுமக்கும் பசு,
ஒரு சாக்கு பச்சை ஆப்பிள்களை முழுங்கியிருக்கிறேன்,
ஏறியாகிவிட்ட்து தொடர்வண்டியில், இனி இறங்க வழியில்லை.

# இது ஒரு மொழிபெயர்ப்பு முயற்சியே..
ஆங்கில மூலம்: METAPHORS BY SYLVIA PLATH.
கருவுற்றிருந்த காலத்தில் கவிஞர் பாடியது. பொதுவாக அந்த சமய்ங்களில் பெண்கள் பெருமையுடன் ஓளி வீசி வலம் வருவார்கள் என்பது தான்   எதிர்பார்ப்பு ஆனால் இந்த பாடலில் தனது அசெளகரியங்களையும் பதிவு செயகிறார். தன் உருவத்தை அவர் கேலியாக பதிவு செய்வ்தோடு கடமை அவருடைய தனித்தன்மையை பறித்துக் கொள்கிற்து என்றும் ஆதங்கப்படுகிறார்.
METAPHORS
BY SYLVIA PLATH.
I’m a riddle in nine syllables,
An elephant, a ponderous house,
A melon strolling on two tendrils.
O red fruit, ivory, fine timbers!
This loaf’s big with its yeasty rising.
Money’s new-minted in this fat purse.
I’m a means, a stage, a cow in calf.
I’ve eaten a bag of green apples,
Boarded the train there’s no getting off.

கொஞ்சம் நேசிக்க பழகலாமே!


கொஞ்சம் போதுமே
ஏன் மேலதிகம் தேடுகிறேன்?
அச்சம்!
நாளை வருமே?
வரட்டுமே!
பசியோடு இரையும்
கொண்டு தராதா?

வர மறுக்கிறதே
நம்பிக்கை!
கொண்டு தரும்,
நம்பிவிட்டால் தானென்ன?
மாறாக
வெறுங்கையுடன்
நாளை வந்து நின்றால்…
குடியா முழுகி விடும்?

நம்பித்தான் பார்ப்போமே
சுயநலம் மறந்து
கொஞ்சம் நேசிக்க பழகலாமே!