எவன் ஒருவனும் இல்லையோர் தீவு!


 

எவன் ஒருவனும் இல்லையோர் தீவு:
அதனில் அதுவே முழுமையாக,
ஒவ்வொரு மனிதனும் ஒரு துண்டாம்
அகண்ட கண்டத்தின்:
பகுதியாம் முழுமுதலின்.
கட்டிமண்ணை கடல் கரைத்தெடுத்தால்
குறைகிறதென்னவோ முழுக்கணடமாம், (ஐரோப்பாவாம்)
துருத்தும் முனைக்கோடி கரைந்தாலும்.
உன் நண்பனின் மாளிகை கரைந்தாலும்,
அல்லது உனதே கரைந்தாலும்:
எவன் ஒருவனின் சாவும் தேய்க்கிறதென்னை,
ஏனெனில் நான் கலந்திருக்கிறேன் மானுடத்தினூடே
அதனாலேயே அறிந்து வர அனுப்பாதே என்றும்
சாவு மணி யாருக்காக ஒலிக்கிறதென்று;
அது ஒலிப்பது உனக்கு.

இது ஒரு மொழிபெய்ர்ப்பே
மூலம்:

No man is an island!
– John Donne.

No man is an island,
Entire of itself,
Every man is a piece of the continent,
A part of the main.
If a clod be washed away by the sea,
Europe is the less.
As well as if a promontory were.
As well as if a manor of thy friend’s
Or of thine own were:
Any man’s death diminishes me,
Because I am involved in mankind,
And therefore never send to know for whom the bell tolls;
It tolls for thee.

 

Advertisements