மொழிபெயர்க்கப்பட்டது இன்னுமோர் அத்தியாயம்!


மொத்த மனித இனமும்
நீண்ட நெடியதொரு காப்பியம்
அந்த ஆகச் சிறந்த படைப்பாளியின்!

ஒவ்வொரு மனிதனும் மரணிக்கையில்
ஒரு அத்தியாயம் கிழிபடுகிறது…
ஆனால் மொழிபெயர்க்கப்படுகிறது
இன்னுமோர் மேன்மையான் மொழியில்..

மொழிமாற்ற
முதுமை, சீக்கு, விபத்தென
பல மொழிபெயர்ப்பாளர்களை பணித்தாலும்
அனைத்து மொழிபெயர்ப்பிலும்
அவன் கை இருக்கும்.
மொழிபெயர்க்கபட்ட தாள்களெல்லாம்
கோர்த்து காக்கப்படும்
அந்த மேன்மையான நூலகத்தில்…

என் நண்பனும்
நேற்று கிழிபட்டான்…
மொழிபெயர்க்கப்பட்டிருப்பான்
இன்னும் மேன்மையான மொழியில்..

காத்திருப்பான்
அந்த நூல்கத்தில்!
காத்திருப்பேன் நானும்
மொழிமாற்ற நாளுக்காக..
தாளோடு தாளாக!

#மறைந்த நண்பன் ஸ்ரீராமனுக்கு இது சமர்ப்பணம!

Advertisements

கனவுகள்!


இறுக பற்றிக்கொள் கனவுகளை
ஏனெனில் கனவுகள் மரணித்தால்
வாழ்க்கை பறக்க இயலாத
சிறகொடிந்த பறவை.

இறுக பற்றிக்கொள் கனவுகளை
ஏனெனில் கனவுகள் தொலைந்தால்
வாழ்க்கை பனி உறைந்த
மலட்டு நிலம்.

இது ஒரு மொழிபெயர்ப்பே.

ஆங்கில மூலம்:
DREAMS by Langston Hughes.

Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.
Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow

 

இருந்தாலென்ன? சென்றாலென்ன? வந்தாலென்ன?


ஏன் அஞ்சுகிறேன்
விட்டுச் செல்ல?
“என்ன ஆவோம்
எங்கு செல்வோம்?”
ஏன் இந்த அச்சம்?
பிரபஞ்சத்திலிருந்தோ இல்லை
கடவுளினுள்ளிருந்தோ
ஒரு அழகான ஆனந்தமான
இடத்திலிருந்து தானே
இங்கு வந்தேன்.
சென்று சேரக் கூடியதும்
இந்த பிரபஞ்சத்தினுள்
இல்லை கடவுளினுள்
ஒரு அழகான ஆனந்தமான
இடமாய்த்தானே இருக்க முடியும்.
இருப்பதும் பிரபஞ்சத்தினுள் தானே?
இல்லை அவனுள் தானோ?
இருந்ததும் இருப்பதும் இருக்கப்போவதும்
அழகான இடத்தில் ஆன்நதமாகத்தானா?
இனி இருந்தாலென்ன?
விட்டுச் சென்றாலென்ன?
திருப்பி வந்தால் தானென்ன?

மரணமே கர்வம் கொள்ளாதே!


மரணமே கர்வம் கொள்ளாதே
வல்லமை கொண்டவள் திகிலூட்டுபவளென
சிலர் உன்னை அழைத்தாலும்,
ஏனெனில், நீ அப்படியோன்றுமில்லை.
ஏனெனில், நீ தூக்கியெறிந்து விட்டதாக
யாரை நினைக்கிறாயோ,
அவர்கள் மரணிப்பதில்லை,
அற்ப சாவே, என்னையும் நீ கொன்று விட இயலாது.
கிடப்பும் துயிலும், உன் சாதாரண சாய்ல்களே,
அவையே கூட தருவது பெருமகிழ்ச்சியே,
ஆகவே உன்னிடமிருந்து,
மேன்மேலும் பொங்க வேண்டும்,
எம்மில் ஆகச்சிறந்தவர்,
ஆக விரைவாக ஏகுகிறார்கள் உன்னுடன்,
எஞ்சிய எலும்புகளை விட்டுச் செல்ல
ஆன்மாவை கரைசேர்க்க.

ஒரு அடிமை நீ,
விதியின்,தற்செயலின் ஆணவ அரசரின்
மேலும் நம்பிக்கையிழந்த மூர்க்கரின்.
கடுவிஷத்திலும் ,போரிலும், நோயிலும்
பெருவாழ்வு பெறுகிறாய் நீ  .
ஒன்று தெரியுமா உனக்கு?
உன்னை விட பெரு மயக்கத்தை தருகின்றன
அபினும் ,ஆழ்த்தும் மாய மந்திரங்களும்,
உன் மணியோசையை விட,
ஏன் வீணே தருக்கி வீங்குகிறாய்?
ஒரு சிறுதுயிலை கடந்து
விழிப்போம் எக்காலத்துக்கும்,
சாவே இல்லாமல் போகும்,
மரணமே நீ  மரணிப்பாய்!

இது ஒரு மொழி பெயர்ப்பே!
ஆங்கில மூலம்:

Death Be Not Proud – Poem by John Donne

Death be not proud, though some have called thee
Mighty and dreadfull, for, thou art not soe,
For, those, whom thou think’st, thou dost overthrow,
Die not, poore death, nor yet canst thou kill mee.
From rest and sleepe, which but thy pictures bee,
Much pleasure, then from thee, much more must flow,
And soonest our best men with thee doe goe,
Rest of their bones, and soules deliverie.
Thou art slave to Fate, Chance, kings, and desperate men,
And dost with poyson, warre, and sicknesse dwell,
And poppie, or charmes can make us sleepe as well,
And better then thy stroake; why swell’st thou then?
One short sleepe past, wee wake eternally,
And death shall be no more; death, thou shalt die.