மாத்திப்புட்டாய்ங்க!


மாத்திப்புட்டாயங்க
சாபமா
வரத்தை.


ஆக்கிப்புட்டாய்ங்க
பேரிடரா
மாமழைய.

மாத்தி
அறிவிச்சுங்கிட்டாய்ங்க
வசதியா,
பேரிடரா
மாமழைய.

தப்பிச்சுக்கிட்டாய்ங்க
வெவரமா
படிச்சவனும்
பொறுப்பா
இருக்க வேண்டியவனும்.

மாட்டிக்கிட்டாய்ங்க
வெவரமில்லாம
பாமர பயலுக
எப்பயும் போல.

வாங்கிக்குவாய்ங்க
ஏமாந்து
அவெய்ங்க காசையே
நிவாரணமா
கேயேந்தி கும்புட்டு
எப்பயும் போல.

 

Advertisements

பல்லிளித்தது பொழப்பு!


பல்லிளித்து விட்டதே
பொழப்பு
ஒரு மழைக்கு!

நல்லா
முயன்றோமே
வெட்டித்தனமா
வெட்டி வாழ,,,

சீறிப் பொங்கிவிடாதா
குலைக்க முயன்றால்?
சம்மதிக்குமா
சமநிலை குலைய?

சகலமும் தருமடா
ஒட்டி வாழும் வரை.
சர்வ வல்லமை கொண்டதடா
சூழ் இயற்கை!

“அம்மா மகனிடம்”


 

நல்லா இருப்பாய், மகனே,
நான் சொல்வேன் கேள்;
வாழ்க்கையெனக்கு இருக்கவில்லை
பளிங்கு படிக்கட்டாய்
அதில் ஆணிகள் இருந்தன,
தெறிசிலாம்புகளும்,
பிய்ந்த பலகைகளும்,
விரிப்பு விரிக்கா தரைகளும்-
மொட்டையாய்.
ஆனால் எல்லா சமயத்திலும்
ஏறுகின்றேன் மேலே மேலே,
அடைகின்றேன் இடைப்படும் தளங்களை,
திரும்புகின்றேன் திருப்பங்களில்,
இன்னும் சில சமயங்களில்
அடர் இருளில்,
அங்கெல்லாம் வெளிச்சமே இருப்பதில்லை.
ஆகையால் மகனே முதுகை காட்டாதே,
காலடியை கீழ்ப்படியில் வைக்காதே,
கடினமாக காண்பதால்,
விழுந்து விடாதே இப்போது-
ஏனெனில்
நான் இன்னும் போய்க்கொண்டிருக்கிறேன்,
நான் இன்னும் ஏறுகின்றேன்,
வாழ்க்கையெனக்கு இருக்கவில்லை
பளிங்கு படிக்கட்டாய் இன்னும்..

இது ஒரு மொழிபெயர்ப்பே, மூலம்:

“Mother to son” by Langston Hughes.
Well, son, I’ll tell you:
Life for me ain’t been no crystal stair.
It’s had tacks in it,
And splinter,
And boards torn up,
And places with no carpet on the floor—
Bare.
But all the time
I’se been a-climbin’ on,
And reachin’ landin’s,
And turnin’ corners,
And sometimes goin’ in the dark
Where there ain’t been no light.
So, boy, don’t you turn back.
Don’t you set down on the steps.
‘Cause you finds it’s kinder hard.
Don’t you fall now—
For I’se still goin’, honey,
I’se still climbin’,
And life for me ain’t been no crystal stair.

யாருக்காக ஒலிக்கின்றது மணி?


# தற்செயலாய் நடந்ததா தெரியவில்லை
John Donne  இன்  For whom the bell tolls ஐ வாசித்து வாசித்து அதன் பாதிப்பில் இருந்த சமயம் ந்ண்பனொருவன் தவறிப்போக தாக்கம் இரட்டிப்பாகியது..
அதனால் இந்த மொழிபெய்ர்ப்பு #

யாருக்காக ஒலிக்கின்றது மணி?

ஒரு வேளை யாருக்காக மணி ஒலிக்கிறன்தோ
அவர் அவவளவு சுகவீனமாகியிருக்கலாம், அதனாலேயே
அது அவருக்காக ஒலிக்கிறதென்றறிய ஏலாமல் இருக்கலாம்;

ஒருவேளை நான் உள்ளதைக் காட்டிலும்
சுகமாக இருப்பதாக நினைக்கலாம்,அதனாலேயே
என்னை சுற்றியிருப்போர்,என்னிலையை காணக் கூடியவர்,
எனக்காக ஒலிக்க வைத்திருக்கலாம், நானதை அறிய மாட்டேன்.

கத்தோலிக்க திருச்சபை பொதுவானது,
அதனாலேயே அதன் அனைத்து செயல்களும்;
அது செய்யும் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்.
அது ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்வித்தால்
அச்செயல் என்னுடன் தொடர்புடையது;
ஏனெனில் அந்தக் குழந்தை , அதனால்,
எந்த உடலுடன் சேர்க்கப்படுகிறதோ அதுவே என் தலையும் கூட;
எந்த் அமைப்புடன் இணைவிக்கப்படுகிறதோ அதனின் அங்கம் நான்;
அது ஒரு மனிதனை புதைக்கும் போதும்
அச்செயல் என்னுடன் தொடர்புடையது.

அனைத்து மனிதஇனமும் ஒரு பெருங்காப்பியமே ,
படைப்பாளி ஒருவனே;
ஒரு மனிதன் மரணிக்கையில்
ஒரு அத்தியாயம் கிழிக்கப்படுகிறது புத்தகத்திலிருந்து;
ஆனால் மொழிமாற்றமாகிறது இன்னும் மேன்மையான மொழியில்.
ஒவ்வொரு அத்தியாயமும் அப்படி மொழிமாற்றப்படவேண்டும்,
இறைவன் பல மொழிபெயர்ப்பாளர்களை பணிக்கின்றான்;
சில பகுதிகள் மூப்பினால் மொழிமாற்றப்படுகின்றன,
சில சீக்கினால், சில போரினால், சில நீதிபரிபாலத்தினால்…
ஆனால் அனைத்து மொழிபெயர்ப்பிலும் இறைவனின் கை இருக்கும்.
நமது சிதறிய தாள்களை மீண்டும் கோர்க்கும் அவன் கை, அந்த நூலகத்திற்காக,
அஙகே அவை திறந்தே இருக்கும்,ஒன்று மறற்றொன்றுக்காக!

நற்செய்திக்கு ஒலிக்கும் மணி போதகருக்கு மட்டுமான அழைப்பில்லை
மொத்த கூட்டத்துக்குமானது ,அதனால இந்த மணி அனைவரையும் அழைக்கிறது:
ஆனால் எவ்வளவு அதிகமாக என்னை?
வாசலுக்கு வெகு அருகில் இந்த வாதையால் உந்தப்பட்ட என்னை;

உட்பூசல் இருந்ததுண்டு வழக்காடுமளவுக்கு
( பக்தியும் மேன்மையும் மதமும் மதிப்பீடுகளும் அதில் பின்னிப் பிணைந்திருந்தன)
எந்த மதப்பிரிவு பிரார்த்தனைக்கு அழைக்க காலையில் முதலில் ஒலிப்பதென;
தீர்மானிக்கப்பட்டது ,எவர் முதலில் எழுகிறார்களோ அவர்களே ஒலிப்பதென,
சரிவர உணர்ந்து கொண்டாமேயானால், இந்த மணியோசையின் மேன்மையை,
மாலையில் பிரார்த்தனைக்கு அழைப்பதை,ஆனந்தமாக ஆக்கிகொள்வோம்
முதலில் எழுந்து அதை நமக்கானதாக, அவவகையில்
அது நமக்கானதாகவும் அவனுக்கானதாகவும் ஆகலாம்,
அசலில் அது அவனுக்கே ஆனது;

மணி ஒலிக்கின்றது, தனக்காக ஒலிக்கிறதென்றெண்ணுபவனுக்கு,
ஒரு வேளை இடைவேளை விட்டு மீண்டும் ஒலித்தாலும்,
முதலில் ஒலித்ததை கேட்ட நிமிடத்திலேயே
ஒன்றுபட்டுவிடுகிறான் இறைவனோடு.
யார் தான் கண் பதிப்பதில்லை சூரியன் உதிக்கும் போது அதன் மீது?
யார் தான் விலக்குகிறார்கள் பார்வையை எரிகல் வெடித்து விழும் போது?
யார் தான் காதை தீட்டுவதில்லை எந்த மணி ஒலித்தாலும் எந்த தருணத்திலும்?
யார் தான் காதை விலக்கி கொள்வார்கள்
அவரிடமிருநதவ்ரின் ஒரு துண்டை பியித்தேகும் போது?
எவன் ஒருவனும் இல்லையோர் தீவு:
அதனில் அதுவே முழுமையாக,
ஒவ்வொரு மனிதனும் ஒரு துண்டே
அகண்ட கண்டத்தின்:
பகுதியே முழுமுதலின்.
கட்டிமண்ணை கடல் கரைத்தெடுத்தால்
குறைகின்றதென்னவோ முழுக்கணடமே, (ஐரோப்பாவாவே)
துருத்தும் முனைக்கோடி கரைந்தாலும்.
உன் நண்பனின் மாளிகை கரைந்தாலும்,
அல்லது உனதே கரைந்தாலும்.
எவன் ஒருவனின் சாவும் தேய்க்கின்றதென்னை,
ஏனெனில் நான் கலந்திருக்கின்றேன் மானுடத்தினூடே
அதனாலேயே அறிந்து வர அனுப்பாதே என்றும்
சாவு மணி யாருக்காக ஒலிக்கின்றதென்று;;அது ஒலிப்பது உனக்கு.
இது இன்னலை இறைஞ்சுவதோ இல்லை இரவல் வாங்குவதோ அல்ல,
ஏதொ ஏற்கென்வே இருக்கு இன்னல் போதாது போல,
தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் மேலும் அண்டை வீட்டானிடமிருந்து,
உண்மையில் மண்ணிக்கப்பட கூடிய பேராசையிது,
ஏனெனில் சோதனை புதையலே,
எவனுக்குமே சோதனைகள் போதமானதாக இருப்பதில்லை;
எவனுமில்லை, முதிர்ச்சியடைந்து பழுத்து இறையருளுக்கு பாத்திரமாகாதவன்.
போதுமானதாக இருப்பின்.

ஒருவன் புதையலை பொன்.வெள்ளிப்பாளாங்காக சுமந்தாலும்,
அல்லது ஒரு தங்கக்கட்டியில் அடக்கியிருந்தாலும்,
ஆகாது செலவுக்கு, அவனது பயணங்களில் ,புழங்கும் காசாக்காதவரை.
கடுஞ்சோதனை அதனில் அதுவே பெரும் புதையல் தான்,
ஆனால் ஆகாது புழங்கும் காசாக வழிச்செலவுக்கு;
வேண்டுமெனில் இட்டுசெல்ல்லாம்
அருகே மிக அருகே நம் இல்லத்திற்கு, தேவலோகத்திற்கு,
இன்னொருவன் சுகவீனமாயிருக்கலாம்,
சுகவீனமாய்ருக்கலாம் சாகுமளவிற்கு
அந்த கொடுந்துயர் புதையுண்டிருக்கலாம் அவன் அடிவயிற்றில்,
தங்கம் சுரங்கத்தில் புதைண்டிருப்பது போல,அவனுக்கேதும் பயனில்லாமல்,
ஆனால இந்த மணியோசை, அறிவிக்கின்றது எனக்கு, அவன் கடுஞ்சோதனையை;
தோண்டியெடுத்து எனக்காக்குகிறது தங்கத்தை .புழங்கும் காசாக:
இன்னொருவனின் இன்னலை என் இன்னலாக பாவித்து
அதனாலே என்னை காத்துகொள்கிறேன், என் இறைவனை நாடி
எவன் ஒருவனே நமகெல்லாம் காப்போ, அவனை நாடி!

 

ஆங்கில மூலம்:

For Whom The Bell Tolls – Poem by John Donne
PERCHANCE he for whom this bell tolls may be so ill,
as that he knows not it tolls for him;
and perchance I may think myself so
much better than I am, as that they who are about me,
and see my state, may have caused it to toll for me, and I know not that.
The church is Catholic, universal, so are all her actions;
all that she does belongs to all.
When she baptizes a child, that action concerns me;
for that child is thereby connected to that body which is my head too,
and ingrafted into that body whereof I am a member.
And when she buries a man, that action concerns me:
all mankind is of one author, and is one volume;
when one man dies, one chapter I snot torn out of the book,
but translated into a better language;
and every chapter must be so translated;
God employs several translators; some pieces are translated by age,
some by sickness, some by war, some by justice;
but God’s hand is in every translation,
and his hand shall bind up all our scattered leaves
again for that library where every book shall lie open to one another.
As therefore the bell that rings to a sermon calls not upon the preacher only,
but upon the congregation to come, so this bell calls us all;
but how much more me, who am brought so near the door by this sickness.
There was a contention as far as a suit (in
which both piety and dignity, religion and estimation, were
mingled),
which of the religious orders should ring to prayers first in the morning;
and it was determined, that they should ringfirst that rose earliest.
If we understand aright the dignity of
this bell that tolls for our evening prayer, we would be glad to
make it ours by rising early, in that application,
that it might be ours as well as his, whose indeed it is.
The bell doth toll for him that thinks it doth; and though it intermit again,
yet from that minute that this occasion wrought upon him, he is united to God.
Who casts not up his eye to the sun when it rises?
but who takesoff his eye from a comet when that breaks out?
Who bends not his ear to any bell which upon any occasion rings?
but who can remove it from that bell which is passing a piece of himself out of this world?
No man is an island, entire of itself;
every man is a piece of the continent, a part of the main.
If a clod be washed away by the sea,
Europe is the less, as well as if a promontory were,
as well as if a manor of thy friend’s or of thine own were:
any man’s death diminishes me, because I am involved in mankind,
and therefore never send to know for whom the bell tolls;
it tolls for thee.
Neither can we call this a begging of misery, or a borrowing of misery,
as though we were not miserable enough of ourselves,

must fetch in more from the next house,
in taking upon us themisery of our neighbours.
Truly it were an excusable covetousness if we did,
for affliction is a treasure, and scarce any man hath
enough of it.
No man hath affliction enough that is not matured and
ripened by it, and made fit for God by that affliction.
If a man carry treasure in bullion, or in a wedge of gold,
and have none coined into current money,
his treasure will not defray him as he travels.
Tribulation is treasure in the nature of it,
but it is not current money in the use of it,
except we get nearer and nearer ourhome, heaven, by it.
Another man may be sick too, and sick to death,
and this affliction may lie in his bowels,
as gold in a mine, and be of no use to him;
but this bell, that tells me of his affliction,
digs out and applies that gold to me:
if by this consideration of another’s danger I take mine own into contemplation,
and so secure myself, by making my recourse to my God,
who is our only security.