சிரிக்குது காலம்!


 

 

பொண்டாட்டிக்கு
பொடவை எடுக்கும் போது
பெத்தவ நெனைப்பு..

பெத்தவளுக்கு
பொடவை எடுக்கும் போது
பொண்டாட்டி நெனைப்பு…

பொறாமை…
கூச வைக்கும் பொறாமை
பெத்தவ மேலேயே.
பொண்டாட்டி மேலேயே.

ஏலாமை…
நெசத்தில் அது
நம்பிக்கை வச்சவங்க
எதிர்பார்ப்புகளை
ஒரு சேர
நெறைக்க முடியாத
ஏலாமை.

இப்ப புத்திககு எட்டி
என்னத்த  கிழிக்க
பொண்டாட்டிய
காலன் கொண்டுபோயிட்டான்..
கோலம் கொறைச்சுடுச்சு காலம்
அம்மாவெ,-
அப்பா இப்ப இல்ல-
பொடவையெல்லாம் வேணாம்னுட்டாங்க..

குரூரமாக சிரிக்குது காலம்!
என் ஈனத்தனத்தை
எனக்கே காட்டி!

Advertisements

பிசாசுகளையே தேர்ந்தெடுப்பார்கள்!


 

வாத்தென்று தெரிந்திருந்தும்
பறக்கும் அன்னமென்று நம்புகிறார்கள்.
புறந்தள்ளுகிறார்கள்
திரும்பத்திரும்ப
இரண்டு கைகளாளும்
மீள மீள
கண்களுக்கு முன் வந்து
நிற்கும் உன்மையை.

மக்களையும்
சூழ் இயற்கையையும்
காத்து மேம்படுத்தி
அடுத்த தலைமுறைக்கு
கடத்த வேண்டிய
நெடுங்கடமையின்
ஐந்தாண்டு பொறுப்புக்கு
மனிதரேயல்லாத
பிசாசுகளுக்குப் போய்…

 

வேறென்ன செய்வார்கள்?
மொழி ,இனந்
சாதி ,மத,
காசு
கிறுக்குகளில்
ஊறி மனிதத்தை
தொலைத்த
இந்த பேய்கள்
வேறென்ன செய்வார்கள்?
பிசாசுகளையே தேந்தெடுப்பார்கள்!

அந்த மூணு பேர்!நான் ஒருத்தனில்லை
எனக்குள்ள மூணு பேர்.
ஓருத்தன் துடிப்பானவன்
எதையாவது செய்யணுமுன்னு
எப்பவும் துடிப்பவன்.
சுத்தமா சுயசார்புடையவன்,
எனக்கு ரொம்ப பிடிக்கும்
இவனை.

அடுத்தவன் முதலாமவன்
சட்டையை பிடிச்சு
பின்னுக்கு இழுக்கிறவன்,
எதுக்கும் எப்பவும்.
அம்மா, அப்பான்னு ஆரம்பிச்சு
ஊரு உலகம்
எல்லாத்துக்கும் பய்ப்படுவான்
பெரிய கழுத்தறுய்ப்பு
இவன்.

மூணாவது ஒருத்தன் இருக்கான்
துடிப்பும் கிடையாது
இழுத்தடிப்பும் கிடையாது
சும்மா சதா வேடிக்கை மட்டும்..
சலனமே இல்லாமல்
பார்த்துக்கிட்டே இருப்பான்..
பார்த்து
பதிவு பண்ணிக்கிட்டே இருப்பான்
பார்தத்தை எல்லாம்
ஒண்ணு விடாமல்
எனக்கு பிடிக்கவே பிடிக்காது
இவனை !