இரண்டும் செய்யும்


வித்தியாசமான சமயம்

விடியலுக்கு முன்னான

அந்த ஒன்றரை மணிநேரம்.

பிரம்ம முகூர்த்தம்….

சொல்லக் கேட்டிருக்கிறேன்

இரண்டு உலகங்களுக்கிடையே

வாசல் திறக்கும் நேரம்…..

ரூமியின் பாட்டைப் படித்திருக்கிறேன்

தெரியாதெனக்கு உட்பொருளெல்லாம்.

விசித்திரமாக

விடைகள் கிடைத்திருக்கின்றன

அந்த வித்தியாசமான சமயங்களில்

வினாக்கள் பலவற்றிற்கு.

சிவ்வென்று பறக்கத்தூண்டும்

விண்ணில்

சில விடைகள்

விடுதலையாக்கி

கழுவேற்றிக் கொல்லும்

காலையிலேயே

சில உண்மைகளும்!

 

Advertisements

கூசவைத்த நம்பிக்கை!


இரவில் வராந்தாவில் அமர்ந்து

உணவருந்தும் பழக்கம்

ஒரு பூனையின் சிநேகத்தை

சம்பாதித்துக் கொடுத்தது

நித்தம் இரவில்

என்னுடன் உணவருந்தும்

சிநேகிதியைக் காணவில்லை

சில நாட்களாக

அன்றிரவு

அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனை

தட்டியெழுப்பியது

ஒரு பிறாண்டல் சத்தம்

சன்னலைத் திறத்தவன முன்னால்

இடையில் காணாமல் போயிருந்த

சிநேகிதி

“பசிக்குதோ?”

பாலெடுக்கத் திரும்பியவனின்

காலைத் தேய்த்து விட்டு

ஒடியது வெளியே

“கிறுக்கு மூதி “,என்று முனகிவிட்டு

சன்னலை சாத்துமுன்

மீண்டும் அந்த மூதி

இம்முறை வாயில் ஒரு குட்டி

சுதாரிக்குமுன் கவ்விய குட்டியை

காலடியில் போட்டு விட்டு ஓடியது

ஓடியோடி எடுத்து வந்து

கிடத்தியது

கண்திறக்காத குட்டிகள்

ஐந்தை

அண்ணாந்து பார்த்தது

அடுத்து

தாயாக பரிணமிக்க

கோரி நின்றாள்

என் சின்ன சிநேகிதி

ஏனோ கூச வைத்தது

அவளின் நம்பிக்கை!

 

 

காலத்தின் வன்மம்சில நிகழ்காலக் காட்சிகள்

கடத்திவிடுகின்றன

கடந்தகால பிம்பங்களுக்குள்

சடுதியில்

ஆனந்தமாய் பயணிக்க

தொடங்குமுன்னே

பொட்டென்று போட்டுவிடுகிறது

அகாலமும்

சிதறிவிழுகிறேன்

நிகழ்கால தருணத்திற்குள்

வாரிக் குவிக்கிறேன் என்னை

அடுத்த காட்சி கடத்தும் வரை

சுழன்றடிக்கிறது

குரூர சுழற்சி….

(பொறுத்துக் கொள்க மனைவியை இழந்தவனின் புலம்பலை)

 

 

காய்க்கார அப்பத்தா


ஆறாத புண்ணு பாதத்தில
பார்க்கப் பொறுக்காத
ஆரோ பெரியவரு
ஆவாரம்பூ அருமருந்தாகும்னாரு
ஆரு கொண்டு தருவா?
கொண்டு வாரேன்
ஆறுதலா சொல்லிச்சு
காது வளர்த்த 
காய்க்கார அப்பத்தா
கொண்டு குடுத்த கையோடு
ஆறிப்போகும்டா அய்யான்னு
வாழ்த்துச்சு வாயார
"ஆவாரை இருக்கையில் 
 சாவாரைக் கண்டதுண்டோ?"
சித்தர் வாக்கு பலிச்சுச்சோ?
அப்பத்தா வாக்கு பலிச்சுச்சோ?
ஆறிப்போச்சு அதிசயமா!