ஆறாத புண்ணு பாதத்தில பார்க்கப் பொறுக்காத ஆரோ பெரியவரு ஆவாரம்பூ அருமருந்தாகும்னாரு ஆரு கொண்டு தருவா? கொண்டு வாரேன் ஆறுதலா சொல்லிச்சு காது வளர்த்த காய்க்கார அப்பத்தா கொண்டு குடுத்த கையோடு ஆறிப்போகும்டா அய்யான்னு வாழ்த்துச்சு வாயார "ஆவாரை இருக்கையில் சாவாரைக் கண்டதுண்டோ?" சித்தர் வாக்கு பலிச்சுச்சோ? அப்பத்தா வாக்கு பலிச்சுச்சோ? ஆறிப்போச்சு அதிசயமா!
Advertisements