What The Moon Saw?


What The Moon Saw

Two statesmen met by moonlight.
Their ease was partly feigned.
They glanced about the prairie.
Their faces were constrained.
In various ways aforetime
They had misled the state,
Yet did it so politely
Their henchmen thought them great.
They sat beneath a hedge and spake
No word, but had a smoke.
A satchel passed from hand to hand.
Next day, the deadlock broke.

by Vachel Lindsay

 

நிலவென்ன கண்டது?

தேசப் பெருந்தலைவர்கள்
இருவர்
சந்தித்துக் கொண்டனர்
நிலவொளியில்.

சிநேகத்தில்
இயல்பில்லை..
மலிந்திருந்தது
பாசாங்கே…

சுற்றிமுற்றி
ஒரு முறை பார்த்துக் கொண்டார்கள்
குற்ற உணர்ச்சியில்..

முகங்களில்
ஏனோ
இதயம்
இழுத்துப் பிடிக்க
முயன்று
தோற்கும்
பேராசைக் கோடுகள்..

பல வழிகளில்
முற்காலங்களில்
தவறுதலாக
வழிநடத்தியிருக்கிறார்கள்
தேசத்தை…
ஆனால் படு நேர்த்தியாக..

கொண்டாடி
மகிழந்திருக்கிறார்கள்
அவரவர் அல்லக்கைகள்,
தத்தம் தலைவர்களை,
பெருமையாக!

அமர்ந்து கொண்டார்கள்
வக்கிரமாக
புதர்மறைவில்..
பேசிக் கொள்ளவில்லை..
புகைத்துக் கொண்டனர்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள..

கைமாறியது பெட்டி….

அடுத்த நாள்
அறிவிப்பு வந்தது:
அனைத்தும் சீரானதாக..
முட்டுச்சந்தில் நின்றிருந்த
பேச்சுவார்த்தை
முன்னேறி முடிவுக்கு வந்ததாக….
கருத்தொருமை
எட்டியதாக…
இரு பெருந்தலைவர்களும்
வேறுபாடுகளை
விட்டுக் கொடுத்ததாக…

தேசநலன் கருதி!

-தமிழில் நான்.

Advertisements

Clouds.
I’d have to be really quick
to describe clouds –
a split second’s enough
for them to start being something else.

Their trademark:
they don’t repeat a single
shape, shade, pose, arrangement.

Unburdened by memory of any kind,
they float easily over the facts.

What on earth could they bear witness to?
They scatter whenever something happens.

Compared to clouds,
life rests on solid ground,
practically permanent, almost eternal.

Next to clouds
even a stone seems like a brother,
someone you can trust,
while they’re just distant, flighty cousins.

Let people exist if they want,
and then die, one after another:
clouds simply don’t care
what they’re up to
down there.

And so their haughty fleet
cruises smoothly over your whole life
and mine, still incomplete.

They aren’t obliged to vanish when we’re gone.
They don’t have to be seen while sailing on.

by -Wislawa Szymborska..


மேகங்கள்.

வேக வேகமாக
விரையவேண்டும்
அவற்றை விவரிக்க
நொடிப்பொழுதின்
ஒரு பின்னம் போதும்
அவை வேறேதோவாக…

அவற்றின்
அசாதாரண முத்திரையே:
அவை
மீள எடுப்பதில்லை
அதே வடிவத்தை
தருவதில்லை
அதே சாயையை
காட்டுவதில்லை
அதே தோரணையை
வருவதில்லை
அதே ஒழுங்கமைவுக்குள்…


சாதாரணமாக
மிதிக்கின்றன
உண்மைகளின் மீது
எவ்வகை நினைவுகளின் சுமையுமின்றி…

“எதற்குத் தான்
அவை
சாட்சியாக முடியும்
நிலத்தின் மீது
நிகழ்வனவற்றில்?
அவை தான்
சிதறி கலைந்து
விடுகின்றனவே
ஏதும் நிகழும்
தருணத்தில்”ஓப்பீட்டளவில்
மேகங்களை விட
வாழ்க்கை உறுதியான நிலத்தில்,
யதார்த்தத்தில்
நிரந்தரமாய்
ஏன் நித்தியமாயும்…

மேகங்களுக்கு
அருகில்
கற்களும்
உடன் ஜனித்த
சகோதரர்களாய்,
அவை ஒட்டாத
தூரத்து
ஒன்று விட்ட
உறவுகளாய்..

வேண்டுமெனில்
மக்கள்
இருக்கலாம்
இல்லை மரிக்கலாம்
ஒருவர் பின்
ஒருவராக
அவற்றிற்கு
அக்கறையில்லை
அவற்றின் கீழ்
நிகழ்வனவைகளில்..
ஆகவே
செருக்குடன்
அணிவகுத்து கடக்கின்றன
உங்களின்
என்னின்
இன்னும்
முடிவுறா வாழ்க்கையை…

நாம் மறைந்தவுடன்
மறைய வேண்டிய
கடப்பாடில்லை
அவற்றிற்கு..
மிதந்து கடக்கும்
அவற்றைக் காணவேண்டியதுமில்லை!


-தமிழில் நான்.

Acceptance.


Acceptance

When the spent sun throws up its rays on cloud
And goes down burning into the gulf below,
No voice in nature is heard to cry aloud
At what has happened. Birds, at least must know
It is the change to darkness in the sky.
Murmuring something quiet in her breast,
One bird begins to close a faded eye;
Or overtaken too far from his nest,
Hurrying low above the grove, some waif
Swoops just in time to his remembered tree.
At most he thinks or twitters softly, ‘Safe!
Now let the night be dark for all of me.
Let the night bee too dark for me to see
Into the future. Let what will be, be.’

by Robert Frost

ஏற்பு.

களைத்து ஒய்ந்த
கதிரவன்
கிரணங்களை
மேகங்களின்
மீது
வீசியெறிந்து விட்டு
எரிந்து கடலில்
வீழ்ந்த போதில்,
இயற்கையின்
எந்தக் குரலும்
உரக்க ஆட்சேபித்து
ஒலித்து
கேட்கவில்லை,
நிகழ்ந்தை எதிர்த்து…

குறைந்த பட்சம்
பறவைகள்
நிச்சயம் அறியும் நிகழ்ந்ததை,
வானம் இருளுக்கு
மாறியதை..

ஒரு பறவை
நெஞ்சில் ஏதோ
சின்ன முனுமனுப்புடன்
மூட ஆரம்பிக்கிறது
மங்கிக்கொண்டு வரும் கண்ணை…

இலக்கின்றி எங்கோ பறந்து
காலந்தாழத்தி திரும்பிய
இன்னொரு ஒற்றைப் பறவை
தோப்பின் மீது
தாழப்பறந்து
வட்டமடித்து
ஒரு வழியாக
இறங்கியமர்கிறது
தன் மரக்கிளையை
அடையாங்கண்டு..

அதிகப்பட்சம்
அதன் நினைப்பு,
முனுமுனுப்பெல்லாம்..
“அடைஞ்சாச்சு
…..இனி இரவு
ஆழ்த்தட்டும்
என்னை இருட்டில்..

இருட்டிக் கொண்டு
வரட்டும்
இரவு,
என் கண்கள்
எதிர்காலத்தை
கண்டுவிட
முடியாதபடி…
எது நடக்கணுமோ
அது நடக்கட்டும்”

-தமிழில் நான்.

பெண்ணின் அன்பு…


 

பெண்ணின் அன்பு…
ஓ!அதி அற்புதமானது அது..

தாயோ தாரமோ
வெளியூர்களுக்கு
சிறு பயணமாகவோ
சற்றே நீள்பயணமாகவோ
செல்லப் போவதாகச் சொல்லிப் பாருங்கள்..

பெட்டியோ பையோ
தேர்ந்தெடுத்து
தூசிதட்டப்பட்டு
துடைக்கப்படும்
பளபளவென…

சட்டை பேண்ட்
உள்ளாடைகள்
கைக்குட்டைகள்
தேவைக்கு அதிகமாகவே
துவைத்து தேய்த்து
அடுக்கப்படும்..

டூத்பேஸ்ட் பிரஷ்
என ஆரம்பித்து
தலைவலித் தைலம் வரை
நிரப்பப்படும் நேர்த்தியாக…

குளிருக்கு சால்வை
வாசிக்க புத்தகம்
இப்போதெல்லாம்
கூடுதலாக
செல்போன் சார்ஜர்..

எப்படித்தான்
பெட்டியும்
தன் கொள் அளவை
விரிந்து கொடுக்கிறதோ
அவர்கள் விருப்பத்திற்கு?

இது பத்தாதென்று
சிறு கைப்பையில்
பிடித்த சிற்றுண்டியும்
தண்ணீர் போத்தலும்…

தயாராகி கிளம்பும்போது
வாசலுக்கு தாம்
முன்னோடி
அவர்கள்
எதிர்ப்பட
நம்மை வெளியே
அனுப்புவார்கள்…
பெட்டியை
வீசி நடக்க முயல்கையில்
கூடுதலாக கனக்கும்…

அவர்கள் இதயத்தையும்
அல்லவா திணித்து
அனுப்புகிறார்கள்!

 

நான் காண்பது நிலவை!


 

உப்பரிகைகளில்
நின்று
குனிந்து
கொக்கரிப்போரே!
நீங்கள் காண்பது
சாக்கடையில்
நிற்கும் என்னை மட்டுமே!
நான் அண்ணாந்து
காண்பதெல்லாம்
நிலவை,
நட்சத்திரங்களை!

முதுமை.


 

களைத்து போனது
மாத்திரைகளும்
ஊசிகளும்
சலித்துப் போனது ரப்பர் விரிப்புகளும்
என்னுள் ஏதேதோ
திரவத்தை
செலுத்தும் குழாய்களும்.
அலுத்து விட்டன
முகங்கள்,
அடையாளம்
தெரியாததாலேயே.
மரணம் நெருங்குகிறது
கனவைப் போல.

கனவு ஆரம்பிக்கிறது
தம்பியின் நகைப்பொலியுடன்..
அஞ்சறைப்பெட்டியில்
அம்மா வைத்த காசைத்
திருடி தின்கிறோம்
நவ்வாப் பழங்களை…
சிரிக்கிறான் தம்பி
என் நாக்கு நீலமாவதை காட்டி…
“மாட்டிக்க போறோம்”
சிரிக்கிறான் தம்பி…

தொந்தரவு செய்யாதீர்கள்
நான் கனவு கண்டு கொண்டிருப்பது
தெரியவில்லையா?
அறிய மாட்டீர்களா?
கனவில் யாரும்
மூப்பெய்துவதில்லை!

இரட்டை வேடம்.


எண்ணுவதென்னவோ

பெரிதிலும் பெரிதாய்…

வாழ்வதென்னவோ குறுக்கு

வழிகளில்.

ஆடித் தீர்ப்பேன்

இரவெல்லாம்

சாத்தானின் தாளத்துக்கு;

நடுங்கித் திரும்புவேன்

விடியலில் வீட்டுக்கு

பிரார்த்திக்க!

இருக்க முடியவில்லை

விசுவாசமாய்

இரவிலும் பகலிலும்

ஒரே எஜமானனுக்கு!