அதே வெளி!


 

என் வீடு,வாசல்
தெரு,தெரு முனை,
குடியிருப்புக் கோயில்,
தேநீர்க்கடை,
அக்கம்பக்கம்
முடிதிருத்தும் கடை,
கறிக்கடை,
மீன்கடை,
காய்கறி அங்காடி,
இரண்டு பலசரக்குக்கடைகள்
எதிரெதிர் பேருந்து நிறுத்தங்கள்,
ஆட்டோஸ்டேண்டு,
பள்ளிக்கூடம்,
உணவகங்கள்,
ஏன் அதை மட்டும் விட வேண்டும்?
டாஸமாக்
கடை,
இரண்டொரு
மருத்துவமனைகள்
மொத்தத்தில்
எங்கள் ஊரில்
எங்கள் வாழ்விடம்
வளர்ந்திருக்கிறது
என்னுடன்..

வளர்ந்திருக்கிறேன் நான்
அதனுடன்..

என் பங்களிப்பு
எப்போதும்
எதிலும்
சிறிதளவேனும்
இருந்திருக்கிறது,
நல்ல காலத்திலும்
பொல்லாத நேரத்திலும்..

ஊரும் பெரும்
பங்களிப்பசெய்திருக்கிறது,
என்
இன்பத்திலும்
துன்பத்திலும்..

நான்
சுற்றி வந்திருக்கிறேன்
என்
ஆயுள் முழுசும்
அதனுள்..

அதுவும் விரிந்து
விரிந்து
அனுமதித்திருக்கிறது
எதையும்
மறைக்காமல்
அதனுள்…

அது இத்தனை
வருடங்களில்
மாறியிருக்கிறது
வெறும் வெளியிலிருந்தது
என் உணர்வுகளின்
கோர்வையாய்!

அதன் கூட்டு
பிரக்ஞையே
என் பிரக்ஞை..
அதன் ஆன்மாவே
என் ஆன்மா!

 

Advertisements

One thought on “அதே வெளி!

  1. Pingback: அதே வெளி! – TamilBlogs

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.