கல்!


 

“செதுக்குவாயா நீ?
அவனுக்கு
ஒரு கல்லை,
அவன் தலை மேல் வைக்க!
செதுக்குவாயா நீ
அவனுக்கு ஒரு நினைவுக்கல்லை?
ஒரு கல்லை
அவனுக்காக?”

 

மூன்று
நாட்களுக்கு
முன்பு,
வெடித்து தெறித்த
கல்லொன்று
வீழ்த்தியிருந்தது
அவள் காதலனை.

சிதறிய
கல்
மண்டையை
சிதறடித்து கொன்றிருந்தது
கல்குவாரியில்,
யாருடைய
அசிரத்தையோ,
இல்லை
அவன்
அஜாக்கிரதையோ,
வெடிவைக்கும் போது
அபாயகரமான
இடத்தில்
அவன்
உலாத்தி தொலைக்க…

துடிப்பான
உயிர்ப்பான
வளர்ந்த உயரமான
வீரமான
அந்தக்
காளை,

எதைப்பற்றியுமே
ஒரு தெளிவான
பார்வை
கொண்டிருந்த
அந்த
வாலிபன்,

ஒரு ஓளி
ஒரு ஓசை
ஒரு உறுமல்
ஒரு உருளல்

வீழந்து கிடந்தான்
உருண்ட
பாறையின் கீழ்,
உயரற்று,
களிமண்ணாய்
முகம்,
முடிவிலியை
காண
அகலத்திறந்த
விழிகள்
விரிந்து நிலைகுத்தி…

செய்தியை
அவளிடம்
உடைக்கச்
சென்று கொண்டிருந்தேன்;
உடைந்த இதயத்தோடு..
நடுங்கிக் கொண்டிருந்தது
இதயம்,
எப்படி என்
உதடுகள்
உடைத்து சொல்லுமென்று?
அதற்குள்
ஒரு
அவசரக்கார
மூர்க்கன்
உடைத்திருந்தான்,
அவள்
ஆசைக்காதலனின்
மண்டை உடைந்து,
உயிர் உடைந்ததை!
உடைத்திருந்தான்,
அவள்
இதயத்தை…
கல்லென
அவள் சமைந்ததைக்
கூட உணராமல்..

நான் சென்று சேர்ந்த போது,
தனியே
நின்றிருந்தாள்..
ஒரு பெண்
மாறியிருந்தாள்
கல்லாகவே..

ஏதுமவள்
சொல்லவில்லையென்றாலும்
எல்லாமவள்
அறிவாளென்பதை
உணர்ந்தேன்.

 

அவள்
இதயம்
செத்திருந்தது;
அதனால்
அவள்
முழங்கவில்லை,
முனங்கவில்லை..
காதலனைப் பெற்ற
அவன் அன்னை கூட
ஓலமிட்டு ஒப்பாரி வைத்தாள்.

இவள்?
சொட்டுக்கூட
அழவில்லை..

அவள் காதலன்
உறங்கினான்,
உறங்கவில்லை
இவள்.

மூன்று பகல்
மூன்று இரவு
ஒரு அணக்கம்..
ம்ஹும்
அசையவில்லை!

மூன்று பகல்,
மூன்று இரவு
அஸ்தமனத்திலிருந்து
உதயம் வரை,
காலையிலிருந்து
மாலைவரை,
கல்லாய்
உறைந்திருந்த அவளின் கணகள்
எதன் மீதும் குவியாமல்
அதே சமயம்
அனைத்தையும்
கண்டு முடித்து
விட்டதை போல..

நாலாம் இரவு
நான் வீடு
திரும்பிய போது
என் வீட்டு
வாசலில்
அவள்..
” செதுக்குவாயாஅவனுக்கொரு
கல்லை”,
கேட்டவள்
வேறேதும் பேசவில்லை.

நுழைந்தவன்
அமர்ந்தேன்
ஒரு நாற்காலியில்
சரிந்து.

அவள் கண்கள்
நிலைத்தன
என் முகத்தில்
அதே
பாரா விழிகளோடு!

அவள் பொறுமையாய்
என் அசைவுகளையே
பார்க்க பார்க்க,
அந்த பார்வை
நிறுத்தியது:
என்
சுவாசத்தை,
உருவியெடுத்தது
என் இதயத்தை’
உறைய வைத்தது
என் உதிரத்தை,
உடைத்தது
என்
எழும்பை,
ஊடுருவியது
அவற்றின்
மஜ்ஜையை!

வேறு வழியின்றி
எழுந்த நான்
தேடி தேர்ந்தெடுத்தேன்
ஒரு கல்லை.

சதுரம்
பார்த்து
செதுக்கி
பளபளபாக்கினேன்..
சிலையாய்
அருகிலேயே
நின்றாள்
நான் செதுக்க
செதுக்க.

 

இரவுக்கு பின்
இரவு
வருவாள்
அவள்,

பார்த்துக் கொண்டேயிருப்பாள்,
காதலனின்
நினைவுக்கல்லை
நான் செதுக்க
செதுக்க

 

என்கரங்களை,
ஒவ்வொரு
உளிக் கொத்தை,

வடிவெடுக்கக
வடிவெடுக்க,
அவள் வடிவுகுலைந்தாள்…
ஆனால்
அவள் கண்களில்
அந்த ஜோதி மட்டும்
பிரகாசம்
கூடிக்கொண்டே……
எனக்குத் தோன்றும்
நினைவுக்கல்லை,
ஒருவரல்ல
இருவர் சேர்ந்து
செதுக்குவதாக….

நானும் மரணமும்.

ஒரு வழியாக
நினைவுக்கல்லும்
இறுதி வடிவெடுத்தது.

அன்றிரவு
அவள்
அவளுடைய சமாதானத்தை,
சாந்தியை
கண்டடைந்தாள்
போலும்?
நான்
உளியையும்
சுத்தியலையும்
தாழச் சாத்தியபோது.

பெருமூச்செறிந்து
விட்டு
என் வீட்டிலிருந்து
வெளியேறினாள்

அன்றிரவு
தான்
அவளை கடைசியாக
கண்டது..

அடுத்த நாளிரவில்
நெடுநேரம்
தனித்திருந்து
யோகத்திலமர்ந்தது போல
இருந்து
உழைத்து
பொறித்தேன்
அவள் பெயரையும்
நினைவுக்கல்லில்!

 

*இது Gibson இன் Stone என்ற கவிதை தந்த பாதிப்பில் அதை தமிழ்ப்படுத்திய முயற்சி..

அது இதை விட நீளம்..

நீளத்தை குறைத்து உக்கிரத்தை குறையாமல் தர முயன்றிருக்கிறேன்..

Advertisements

2 thoughts on “கல்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.