நட்டம் அவனுக்கு மட்டுமா?


கிடைப்பதில்லை
முழு புத்தகமும்..
கிடைப்பது
நடுவில் கொஞ்சம் மட்டும்..
நாம் வாங்கி வந்த
வரம் அப்படி!

கிடைப்பதில்லை
முன்கதையின்
பல பக்கங்களும்
பின்கதையின்
எல்லா பக்கங்களும்

இருப்பதைப் படித்து
அனுமானிக்க வேண்டும்
முன் கதையை ..
முதலில்..

பின் பாதியில்
பயணிக்க முடியும்..
அது தரும்
வெளிச்சத்தில் மட்டும்.

இருப்பதை வாசித்து
அதன் வழி
கற்பனையை வீசியவன்
பிடித்தவவற்றை கொண்டு
பின்னுகிறான் முன்கதையை.

சரி தானா?
அறியவே பகிர்கிறான்
பாவம் அவன்.
குவிவதில்லை
சரி,இல்லையென்ற பதில்கள்.
குவிகின்றன
அச்சுறுத்தல் கணைகள்…
கற்பனையை கடை விரிக்க
அனுமதி மறுத்து…

பகிர்வதை நிறுத்தி
பரிதாபமாய் மௌனிக்கிறான்
பாவம் அவன்.
நட்டம் அவனுக்கு மட்டுமா ?

Advertisements