அந்த மூணு பேர்!நான் ஒருத்தனில்லை
எனக்குள்ள மூணு பேர்.
ஓருத்தன் துடிப்பானவன்
எதையாவது செய்யணுமுன்னு
எப்பவும் துடிப்பவன்.
சுத்தமா சுயசார்புடையவன்,
எனக்கு ரொம்ப பிடிக்கும்
இவனை.

அடுத்தவன் முதலாமவன்
சட்டையை பிடிச்சு
பின்னுக்கு இழுக்கிறவன்,
எதுக்கும் எப்பவும்.
அம்மா, அப்பான்னு ஆரம்பிச்சு
ஊரு உலகம்
எல்லாத்துக்கும் பய்ப்படுவான்
பெரிய கழுத்தறுய்ப்பு
இவன்.

மூணாவது ஒருத்தன் இருக்கான்
துடிப்பும் கிடையாது
இழுத்தடிப்பும் கிடையாது
சும்மா சதா வேடிக்கை மட்டும்..
சலனமே இல்லாமல்
பார்த்துக்கிட்டே இருப்பான்..
பார்த்து
பதிவு பண்ணிக்கிட்டே இருப்பான்
பார்தத்தை எல்லாம்
ஒண்ணு விடாமல்
எனக்கு பிடிக்கவே பிடிக்காது
இவனை !

Advertisements