கனா?

“ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?”,சூர்யா தான் கேட்டான்.
வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு தினாவின் அறையில் கூடியிருந்தார்கள்.
சூர்யா இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க கேட்டு ஆரம்பிச்சு வைப்பான்.
பாண்டியும், தினாவும் பதில் சொல்லுவாங்க. அவர்கள் பதில்களை ஒட்டியும் வெட்டியும் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டு அந்தப் பகல் பொழுதை சுவாரசியமாக்குவான்.
அவன் வயசு அப்படி .26 வயசு.கல்யாணம் ஆகாத மொட்டப் பையன்.
அவங்கவங்க ஊருக்குப் போயிருந்தா கோழியடிச்சோ,கறியெடுத்தோ குடும்பத்தோட விருந்து சாப்பிட தயாராகிக்கிட்டிருந்திருப்பாங்க..
வாரந் தவறாமாக ஊருக்கு போக முடியுமா?
பெருநகர மேன்சன்களில் வாழ்பவர்கள் பெரும்பாலோரின் ஞாயிற்றுக்கிழமைங்க இப்படித் தான்…
“பச்சையா இருக்கும் போதே ஆரம்பிச்சுட்டியே..கொஞ்சம் ஊத்திக்குவோம்..அப்புறம் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேளு..நாங்களும் கனிஞ்சுட்டோம்னா கனிவா பதிலு சொல்லுவோம்ல”.
“அதுவுஞ்சரி தான். கனிஞ்சுட்டே பதிலு சொல்லுங்க பாஸு…. “,-சூர்யா.
அன்று தினாவின் முறை.
ஏற்கெனவே குடிப்பான்,கடிப்பானையெல்லாம் வாங்கி வச்சிருந்தான்.
சரக்கை எடுத்தான்…
“இதென்ன தினா புதுசா?”,பாண்டி சந்தேகமா கேட்டார்..
“Tequila தலைவா !நண்பர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வரும்போது கொண்டு வந்தது..”
“இதை நானும் குடிச்சதில்ல பாஸு
உங்களுக்கு பழக்கமிருக்கா”
“அந்தமான் தீவுகளில் கிடைக்கும்.சர்வதேச சுற்றுலா மையமில்ல. சர்வதேச சரக்குகளும் கிடைக்கும். அங்கே வேலை விசயமா போயிருந்தப்ப குடிச்சிருக்கேன்..
“எந்த நாட்டு சரக்கு கதிர்…”,குடிக்கப் போற சரக்கோட மூலத்தை
தெரிஞ்சுக்கிற ஆர்வம் பாண்டிக்கு..
“மெக்சிக்கோ சரக்கு..ஆதியில் அந்த நாட்டில மட்டும் வடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்த சாராயம்.. இப்ப உலகம் முழுக்க பேரு வாங்குன சரக்கு..”
“எப்படி குடிக்கிறது ..என்னத்த ஊத்தி கலந்துக்கிறது..”
“ஒண்ணும் கலந்துக்க கூடாது.. விளிம்பில் உப்பு தடவிய கிளாசில் ஊத்தி அப்படியே
பச்சையா உப்புப் பட பட முழுங்கிக்க வேண்டியது தான்..
நல்லாருக்கும்..”
ஆர்வமாகி கிளாசுகளின் விளிம்புகள்ல உப்பைத் தடவ முயன்று தோற்றான் சூர்யா.
“என்ன பாஸு உப்பு ஒட்ட மாட்டேங்குது..”
“ இந்த தட்டுல கொஞ்சம் உப்பைக் கொட்டு..ம்..ம்.. கொஞ்சம் பரவலா..”
“கொட்டிட்டேன்.”
“இன்னொரு தட்டை எடுத்து அதுல கொஞ்சம் தண்ணிய ஊத்து…
கிளாசைக் கவுத்தி ஒண்ணுல ஈரப்படுத்தி,
அடுத்ததுல இருக்க உப்பை ஓத்தியெடுத்துக்கோ…”
ஆகா விளிம்பில் உப்பைப் பூசிக்கொண்ட மூணு கிளாசுகள் ரெடி..
“ஏம் பாஸு ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்யளோ..”
“ எனக்கென்னமோ பச்சையா ஊத்திக்கிறதுக்கு பயம்மா இருக்கு.. தூக்கிடுச்சுன்னா..புதுசு வேற”,-பாண்டி.
“ஓண்ணும் ஆகாது தலைவா ..வேணுமின்னா முப்பது முப்பதா ஊத்தலாம்..”
“ சரி..கடிக்க என்ன…”
“பிரிச்சுப் பாருங்க..”
பொரிச்ச கோழி ஈரல்.. “ஆகா எங்க பாஸு பிடிச்சீங்க..”

“நம்ம மெஸ்ஸுல தான். சொல்லி வச்சிருந்தேன்..நல்லாப் பாரு ஈரல் மட்டுமில்ல இரைப்பையும் கலந்து இருக்கும்..
கோழி சில்லறை..பொரிச்சது…”.
“என்ன ஆரம்பிப்போமா?”
“ம்.ம்..”
மூணு பேரும் முழுங்கினார்கள்..
பழக்கமில்லாததால் சரக்கை முழுங்கியதும் தண்ணியை ஒரு மடக்கு குடித்துக் கொண்டார்கள்..பாண்டியும்..சூர்யாவும்..
கோழி சில்லறையில் ஆளுக்கொரு துண்டைக் கடித்துக் கொண்டார்கள்.
“ஏம் பாஸு நான் கேட்டதை மறந்துட்டீங்களா”, மறக்காம விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கினான் சூர்யா

“எதை.. ஓ! அந்த பேய்,பிசாசு ,ஆவி இருக்கான்னு கேட்டியே
அதையா?”
“ஆமா”.

“இருந்தா நல்லா இருக்கும்..”.
“இதென்ன பதிலு பாஸு?”
“இருந்தா இறந்தபோன என் சாயாவை எப்பவாவது பார்த்துரலாமே..”
“இருக்குங்கிறீங்களா ? இல்லங்கிறீங்களா பாஸு?”
“தெரியலை சூர்யா…”
“நீங்க சொல்லுங்கண்ணே”, பாண்டியைக் கேட்டான் சூர்யா.

பாண்டிக்கு சூர்யாவின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமிருக்கவில்லை. பேச்சை வேறு பக்கம் மாத்த

“ஏன் தினா இப்படி உப்புப் பட பட குடிக்கிறதும் நல்லாத் தானே இருக்கு..”
தினாவும் அவர் மனநிலையை ஊகித்துக் கொண்டு அவர் போக்குக்கே..அவர் கேள்விக்கு..

“கிளாசுல தடவிக்கிறதெல்லாம் பின்னால வந்த்தாம்..
கிளாசை ஏந்திக் குடிக்கிற கையில் உப்பைத் தூவி நக்கத் தான் செஞ்சாங்களாம் முதல்ல”

“சரக்க குடிச்சுட்டு உப்பை நக்கிக்கிறது அந்த ஊர் பழக்கம். போல..”

“எல்லா பக்கமும் இருக்கு தலைவா..
ஜாம்நகர்ல(குஜராத்) போட்லியக் குடிச்சுட்டு கறுப்பு உப்பை நக்குறதைப் பார்த்திருக்கேன் .நக்கீருக்கேன்.”
“போட்லி?”
“அந்த ஊர் கள்ளச் சாராயம்”.
“பாண்டிண்ணேன் பேச்சை மாத்தாதீங்க
ஆவி,பேய்,பிசாசு இருக்கா இல்லையா?”
வேறு வழியில்லாமல்…
“இருக்குப்பா சூர்யா..”
“அப்புறம் ஏன் முதல்ல சொல்லலை பேச்சை மாத்தப் பார்த்தீங்க…”

“இந்தா பாரு சூர்யா நான் பல நம்பிக்கைங்க உள்ள ஆளு..
தினாவுக்கு எல்லாம் நிரூபனம் ஆகியிருக்கனும்..தர்க்கரீதியாவது ஏத்துக்குற மாதிரி இருக்கணும். இல்லேன்னா இவர் எதையும் நம்ப மாட்டாரு..குடிக்கிற நேரத்தில் எதுக்கு வீணா வாக்குவாதம்….அதான்…”
“சரி சரி டென்சனாகிதீங்கண்ணே.
என்னண்ணே! நாம என்ன அப்படியா பழகுறோம்..
முதல்ல இன்னும் கொஞ்சம் ஊத்திக்குவோம்…”
அடுத்து இரண்டு முப்பதும் சில கோழிச் சில்லறை துண்டுகளும் சர சரவென்று உள்ளே சென்றன..
இறுக்கம் இளகியிருந்தது..
பாண்டியும் தினாவும் சிகரெட்டைப் பத்த வைத்து ஊதிக் கொண்டிருந்தார்கள்..
“ஏம் பாஸு
தெரியலைங்கிறீங்க.. இருந்தா நல்லா இருக்குங்கிறீங்க.. நம்புறீங்களா இல்லையா…?”
“விட மாட்டே போல இன்னைக்கு….
எனக்கு பேய்,பிசாசு ஆவி இதிலெல்லாம்.. நம்பிக்கையில்லை…
இருந்தா நல்லாருக்கும்னு சொன்னது கூட நம்பிக்கையில்லாமத் தான்..சுயநலமா…எதைத் தின்னா பித்தம் தெளியும்கிற நிலைமை எனக்கு….இருந்தா என் சாயாவை..என்னை விட்டுப் போன சாயாவை பார்த்துரலாமில்ல ..எப்பவாவது …என்னைக்காவது…

ஆனா 7 வருசமாச்சு பார்த்ததேயில்ல….”

“அவுங்க ஆத்மா சாந்தியடைச்சிருக்கலாமில்ல?“,தினா அவன் காலமான மனைவியின் ஆவியைக் கண்டிராததற்கு விளக்கம் தேடினார் பாண்டி..

தினாவின் முகம் கோணுவதைக் கவனித்த சூர்யா அவனைப் பேச விடாமல் பாண்டியிடம் கேட்டான்,” அப்ப சாந்தியடையாத ஆத்மாங்க தான் ஆவியா அலையுமா?”

“அப்படித் தான் நான் நம்புறேன்..அகாலமா நிறைவேத்தாத கடமைகளோட ,தீராத ஆசைகளோட இறந்தவங்களோட ஆத்மாங்கள்லாம் ஆவியா அலையும்..துர்மரணம் அடைஞ்சவங்க பேயா அலைவாங்க… இது தான் என் நம்பிக்கை..”

“அப்ப பேய் ,பிசாசு, மோகினி, காத்து கருப்பு எல்லாம் உன்மைங்கிறீங்க..”
“அப்படித் தான் நம்புறாங்க..அந்த வளர்ப்பின் வழி வந்தவன் தான் நானும்.. நம்புறேன்..”
“உங்க 45 வயசுல பேய்,பிசாசு இருக்கிறதை நேரடியா பர்த்திருக்கீங்களா ?உணர்ந்திருக்கிறீங்களா?”
“நிறைய தடவை..”
“ஏதாவது ஓண்ணைச் சொல்லுங்களேன்”
“வேணாம் சாமி ..நான் என் அனுபவத்தைச் சொல்ல ..
தினா குறுக்க கேள்வி கேக்க… வேணாம்..
என்னோட .. நம்பிக்கைய இவர் கீறிப் பார்ப்பாரு வேணாம்”.
“என்னா பாஸு இப்படி பயமுறுத்தி வச்சிருக்கீங்க..”
“தலைவர் தான் என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்காரு..
நான் நம்புறதுக்கு தான் கேள்வியக் கேட்டுக்குவனே தவிர
அவர் ஏன் நம்புறார்னு நான் கேக்க மாட்டேன்.. அவர் நம்பிக்கை அவருக்கு…என் நம்பிக்கை எனக்கு..இதைத் தாண்டித் தான் தலைவரோட என் சிநேகம்..”
தினா ,பாண்டியை விட இரண்டே இரண்டு வயசு தான் இளையவன் .இருந்தாலும் அவருக்கு நல்ல மரியாதை குடுத்து பழகியிருந்தான்..
“பெறகென்ன பாண்டிண்ணேன் ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கண்ணே..”
“இன்னைக்கு உன் போதைக்கு என்னைய ஊறுகாயாக்க பார்க்கிறீயா சூர்யா?
உனக்கு கதை கேக்கணும்னா தினாவையே கேளேன்…”.
“எனக்கு வேற வழியில்லே பாஸு..
உங்க வாழ்க்கையிலே அமானுஷ்யமான அனுபவம் எதுவுமே,எப்பவுமே ஏற்பட்டதேயில்லையா?”
“அமானுஷ்யம்னா?”
“அறிவுக்கு எட்டாத, விளங்கிக்க முடியாத
நம்ம கைய மீறின ஒரு அனுபவம்னு வச்சுக்கங்களேன்…”
கையில் கிளாசையெடுத்து ஒரு முப்பதை ஊத்திக் கொண்டே யோசித்தான் தினா.
“என்ன பாஸு ஏதாவது..?”
“ம்…..ம்…ம்..”
“என்ன யோசிக்கிறீங்க தினா?”
“சொல்லுறேன்…நீங்களும் ஊத்திக்கங்க..”
அவர்களும் கதை கேக்க ஊத்திக்கொண்டு தயாரானார்கள்..
“நான் அன்னைக்கு கண்டது ஆவியையா இல்ல அது வெறும் கனாவான்னு இன்ன வரைக்கும் பிடிபடல அத வேணுமின்னா
அமானுஷ்யமான அனுபவம்னு சொல்லலாம்…”
“எப்ப ?எங்க வச்சு தினா?”
“15 வருத்துக்கு முன்னால் நான் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அறையெடுத்து தங்கியிருந்தேன். MRL. ..இப்பத் தான் அது CPCL…அதுல வேலை.
அங்க கட்டுமானப் பணி. ஒப்பந்தமெடுத்திருந்த தனியார் நிறுவனத்தில் வேலை.
அன்னைக்கு கட்டுமானப் பணியின் ஒரு முக்கியப் பகுதியோட நிறைவைக் கொண்டாட முதலாளி விருந்து வைத்திருந்தார்.
கொஞ்ச வயசு. கட்டுப்பாடெல்லாம் தெரியலை..குண்டக்க மண்டக்க குடிச்சிட்டு நல்ல போதையில் வந்து மல்லாந்திருந்தேன்…”
“நல்லா நினைப்பிருக்கு தங்கியிருந்த அறைக்கு போய்ச் சேரும் போது இரவு 2.00க்கு மேல இருக்கும்..கம்பெனி வண்டியில் கொண்டு இறக்கி விட்டிருந்தாங்க..”

“உள்ள நுழைஞ்சு தட்டுத் தடுமாறி கைலிக்கு மாறி கட்டிலில் ஏறிப் படுத்தவன்..
தூங்கிப் போனேன். கிட்ட்த்தட்ட மட்டையாயிட்டேன்னே சொல்லலாம்”.

“எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன்னு தெரியலை.. யாரோ தினா,தினான்னு பேரைக் கூப்பிடுற மாதிரி இருக்க முழிச்சுக்கிட்டேன்.”
“முதல்ல ஓண்ணும் புரியல..அப்புறம் பார்த்தா கதவை யாரோ தட்டுறது புரிஞ்சு..
லைட்டைப் போட்டுட்டு.. கைலியை சரியாக் கட்டிக்கிட்டு..திறந்தேன்..”
“பார்த்தா தண்டீ..என்னோட நண்பன் தண்டீஸ்வரன்..
சின்ன வயசுல் இருந்து எனக்கு நெருக்கமானவன். எனக்கு பகுத்தறிவு ஆசான். ஊருக்குள்ள பேய்,பிசாசு நடமாடிக்கிட்டிருக்குன்னு சொல்லப்பட்ட
இடங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று
இல்லைன்னு காண்பிச்சவன்.
சேட்டைக்காரன் .ஆனா ரொம்ப நல்லவன். சரியா படிக்கலை. லாரி டிரைவராக லைனில் ஓட்டிக் கொண்டிருந்தான்.
லோடு அடிக்கச் சென்னைக்கு அடிக்கடி வருவான். வர்றப்பல்லாம் விடியிறப்ப தான் வருவான். என்னையப் பார்த்து சந்தோசப்படுத்திட்டு போறதில் அவனுக்கு
ஒரு சந்தோசம்”.
நிறுத்தி இன்னொரு சிகரெட்டைப் பத்தவைத்து இழுத்தான்..
“அவரு தான் உங்களை இந்த மாதிரி இடக்கு மடக்கா கேள்வி கேக்க பழக்கி விட்டதா பாஸு.?”
“ஆமா அவன் சொல்லிக் கொடுத்தது தான்.
அவன் அடிக்கடி சொல்வான்..வெறும் அறிவு வறட்டு வாதத்துல கொண்டு நிறுத்தீறலாம்..ஆனா அறிவு ஆளலேன்னா
வெறும் உணர்வு குருட்டுநம்பிக்கையில் கொண்டு விட்டுரும் …வேணாம்பான்”.

“அப்புறம் என்ன நடந்தது..”,
மேலே கதை கேக்குற ஆர்வத்தில் பாண்டி தான் கேட்டார்..

“ -என்னடா தண்டீ இந்த நேரத்தில்-

-போடா இவனே… விடியிற நேரமாச்சு-

-சரி..சரி..வா..வந்து படு-

நான் கிடந்து தூங்குற அவசரத்தில் இருந்தேன்.

-விடிஞ்சாத் தான் என்ன
ஞாயித்துக்கிழமை தானே..மெதுவா எந்திருச்சா போதாதா-

-கட்டில்ல ..படுத்துக்க தண்டீ..நான் கீழ படுத்துக்கறேன்-

தலைகாணிய எடுத்துப் போட்டு கீழ விழுந்தேன்..

-டேய்..தினா.. இங்க பாரேன்-

-அப்புறம் பார்த்துக்கலாண்டா ..சுத்துதுடா…தண்டீ-

-டிரைவருக்கு கட்டில குடுத்துட்டு தரையில் படுக்கிற இஞ்சினியர் நீயாத் தாண்டா இருப்பே.. இப்படியே என்னைக் கடைசி வரைக்கும் நினைப்பியா?-

-படுறா வெண்ண.. தூக்கம் வருதுடா-

சொல்லீட்டுத் தூங்கிட்டேன்..”

மீண்டும் நிறுத்தினான்..
பாட்டிலையெடுத்து இன்னொரு ரவுண்டை ஊத்தி முழுங்கிக்கிட்டான்..
சிக்ரெட்டை பரபரப்பா இரண்டுமூனு தடவை இழுத்துவிட்ட தினாவை
திறந்த வாய் மூடாம அடுத்துன்னு
பார்வையாலயே கேட்டுக் கொண்டிருந்தார்கள் சூர்யாவும் பாண்டியும்..

“தூக்கம் போயி முழிச்சுப் பார்த்தப்ப வெயில் அடிச்சுக்கிட்டிருந்தது…கதவுக்கு மேலே வெண்ட்டிலேட்டுரு.. மூஞ்சியில் வெயிலடிச்சுத் தான் முழிச்சிருக்கேன்..

-கீழ கிடக்கிறோம்.. தண்டீ வந்தான்ல-
லேசா நினைப்பு வர எந்திரிச்சுப் பார்த்தேன்..
கட்டில்ல அவனைக் கானோம்..
கதவைப் பார்த்தேன்.. வெறுமனெ சாத்தியிருந்துச்சு.. உள் தாழ்ப்பாள் போடல..

-சரி, டீ…கீ யடிக்கப் போயிருப்பான்-

கட்டிலுக்கடியில் வச்சிருந்த தண்ணி பாட்டிலை எடுத்துக் குடிச்சுட்டு காலைக் கடன்களை முடிச்சுறலாம்னு ஒண்ணொன்னா செஞ்சு முடிச்சேன்..
அவன் வரவே இல்ல…
அவன் பையைத் தேடினேன்..காணலை..

-ராத்திரி வந்த போது பையைக் கொண்டு வந்தானா?-
நினைப்பில்ல.

பசிக்க, வெளியே போய் சாப்பிட்டுட்டு வந்தேன்.போகும் போது சாவியைக் நிலை மேல வச்சிட்டுப் போயிருந்தேன்…
திரும்பி வந்தப்பவும் அவன் வந்திருக்கலை.

-எங்க போயித் தொலைஞ்சானோ?-

மத்தியான்னம் போச்சு,ராத்திரி ஆச்சு…
அவன் வரலை..

-சரி தூங்கி எந்திரிச்சு அவசர வேலையாய்ப் போயிட்டான் போல-
-என் தூக்கத்தை கெடுக்க வேணாம்னு
போயிருப்பான்-
-இல்ல அவன் வரவேயில்லையா?-
-அத்த்னையும் போதையில் நான் கண்ட கனவா..இருக்கலாம் கொஞ்சநஞ்ச போதையா?-

இன்ன வரைக்கும் எனக்கும் விடை தெரியலை..”

“இதில ஏன இன்னும் விடை தெரியலைன்னு தவிச்சுக்கிட்டு பாஸு..உங்க நண்பரை- அதான் தண்டீயக் கேட்டுருக்கலாமில்ல?”, அவசரத்தில் குறுக்கே பாய்ந்தான் சூர்யா.
பாண்டிக்கு ஏதோ பொறி தட்டியது
போலிருந்தது.
“அவசரப்படாத சூர்யா
முழுக்கக் கேளு நீங்க சொல்லுங்க தினா..”.
“ஒரு மாசங்கழிச்சு ஊருக்குப் போயிருந்தேன்..
அப்ப தான் தெரிஞ்சது. என் தண்டீ செத்துப் போயிருந்தான்..முரட்டு விபத்து..
லோடு ஏத்திட்டு சென்னைக்குப் போகிற வழியில் பெரம்பலூருக்கு முன்னால மரத்தில் மோதி.. ஆளு அந்த லக்குலேயே காலி..”
“அவன் இறந்ததாக சொல்லப்படுற நாளும் அதே ஞாயித்துக் கிழமை.. நேரமும் கிட்டத்தட்ட அதே நேரம்..”
பாஸு.!
தினா..!

———————————————————————–

..