கலங்கி நிற்கிறது வாடி


விடிந்ததும்

சூரியனோடு

மென்முறுவலுடன்

தரிசனம் தரும்

எதிர்வீடு

இன்று

கலங்கி நிற்கிறது வாடி

வானேகி விட்டான்

பெற்றெடுத்து காத்தவனும்

வெளியேறி விட்டனர்

விற்றுவிட்டு

அவன்தம் பிள்ளைகளும்

தத்தெடுத்து வளர்ப்பாரா

இடித்தொழிப்பாரா

புதியவர்

கலங்கி நிற்கிறது வாடி

ஆறுதல்

சொல்லத் தெரியாமல்

கலங்கி நிற்கிறேன் நானும்

Advertisements

ஒரு பார்வை.


ஆகிப் போகும்

ஒரு தசாப்தம்

ஆவணி

தேய்பிறை சப்தமியோடு

வாழ்ந்து விட்டேன் நானும்

உத்தமி உன்னைப் பிரிந்து

வாழ வைக்கும்

அடி ஆழத்தில்

பொத்தி வைத்த

ஆழ்ந்த உன்

ஒரு பார்வை

அழைத்துக் கொள்ளும்

காலம் வரை!

ஆண்டான் அடிமை.


டீக்கடை வாசல்

மண்டியிடுகிறது யானை

இறங்கிய பாகன் நீட்டுகிறான்

அங்குசத்தையும் தடியையும்

நெஞ்சோடு அணைக்கிறது

பத்திரப்படுத்த

டீ குடித்து

புகைத்த பின்

நெருங்கியவனுக்கு

மண்டியிடுகிறது

தட்டுகிறான் மத்தளத்தை

ஏறியமர்ந்து

எழுந்து

ஏந்தி தருகிறது

அங்குசத்தையும் தடியையும்

அவனிடமே……