பின்னத்திற்கு வாய்த்தது..


அகண்ட அண்டம்
ஒவ்வொரு கணமும்
தன்னைத் தானே புதுக்கி கொள்கிறது..
விரிகிறதோ சுருங்குகிறதோ ?
தெளிவில்லை..
அதன் அவசியத்துக்கு
பிதுக்கி கொண்ட
பிண்டம் நான்…
அதன் அங்கமாக வளர்த்து
அவசியம் முடிந்த பின்
சிதைத்து உருமாற்றி
நீண்டு கொள்ளும்
இல்லை
உள்வாங்கி சுருங்கி கொள்ளும்?
எத்தனையோ துகளுக்குள்
ஒரு துகளின் பின்னம்….
முழு உண்மையையும்
விளங்கிக் கொள்ள ஏலும்?
பின்னத்தின் சிற்றறிவு..
அதனால் அதனை
அறிந்து கொள்ளுவது
உண்மையின் ஓரம்?
பூரணத்தை
பின்னம் உள்வாங்க ஏலும்?
இன்னொரு பின்னம்
சிற்ற்றிவை விரித்து விடும்?
அண்டத்தின் போக்குக்கு
ஓப்புவித்து விட்டு
சலனமற்றிருக்க மட்டும்
பின்டத்திற்கு ஏலும்?…

Advertisements

வீடு தேடி…


பயணத்தை தொடங்க வேண்டிய நேரம்…
போதுமென்னும் அளவுக்கு
இந்த உலகத்தை பார்த்தாகிவிட்டது
இன்னொரு உலகத்தை
பார்க்க வேண்டிய தருணம் நெருங்கி விட்டது…..

இரு தோட்டங்களுமே அழகானவை
இருந்தும் இவற்றைக் கடந்து
அந்த தோட்டக்கரனை
தேடி கண்டடைவோம்.

பூமியை முத்தமிட்டு
நதியைப் போல
கடலை நாடி
ஓட்டம் பிடிப்போம்..

இந்த கண்ணீர் கணவாயை
விட்டு விலகுவோம்…
இலையுதிர் காலத்தின்
பழுத்த இலைகளப் போல
இதயங்கள் நடுக்குறுகின்றன
புழுதிக் காற்று
வீசும் உலகத்தில்
வேதனையிலிருந்து நீங்க முடியுமா?
நிர்க்கதியாய உணர்வதைத் தான்
தவிர்க்க ஏலுமா?

பஞ்சடைந்த முகங்களுக்கு
புது மொட்டுக்களின்
வண்ணங்களை ஏற்றுவோம்…
பல வண்ணப்
பறவைகளைப் போல பறப்போம்
அந்த மணக்கும்
பூந்தோட்டத்தைத் தேடி!

மறைந்து ஆட்டம் காட்டும்
மாயக்காரன் தீட்டிய
வண்ணக் குவியல்களே எங்கும்…
அந்த வண்ணக் குவியல்களில்
அவன் மறைத்து வைத்திருக்கும்
குறிகளை பின்பற்றுவோம்..
அவனைத் தேடுவோம்..

இது இடர்சூழ் பயணம
சங்கமித்து பயணிப்போமே!
சாலையில் சிதறி விழும்
மழை நாம்..
பெருக்கெடுத்து ஓடி
தேடி அடைவோம் கடலை!

வளைக்கப்பட்ட வில்லில்
பூட்டப்பட்ட அம்பு நாம்..
நேராகி நேராக
அம்பை தொடுப்போம்
இலக்கை நோக்கி..
பயணத்தை தொடங்குவோம்.
வீடு தேடி!

ரூமியின் வரிகளை மொழிமாற்றம் செய்ய முயன்றது;மூலம்:
It is time to start the journey, we have seen enough of this world, it is time to see another
These two gardens may be beautiful, but let us pass beyond them and go to the gardener.
Let us kiss the ground and flow like a river towards the ocean.
Let us go from this valley of tears.
Let us bring the color of blossom to our pale faces.
Our hearts shiver like autumn leaves about to fall.
In this world of dust, there is no avoiding pain or feeling exiled.
Let us become like beautifully colored birds and fly to the sweet land of paradise.
Everything is painted with the brush of the invisible one, let us follow the hidden signs and find the painter.
It is best to travel with companions, on this perilous journey.
We are like rain splashing on a road, let us find our way down the spout.
We are like an arched bow with the arrow in place, let us become straight and release the arrow towards the target.
Let us begin the journey home. ~ Rumi

நரகம்!


அரைகுறையாக
தெளிந்திருக்க வேண்டாம்…
மயக்கத்தின் மடியிலேயே
திளைத்து கிடந்திருக்கலாம்.

நடு இரவைத் தாண்டி
முழு விடியலின் முன்னே
கருக்கலில் விளைந்த
அரைகுறைத் தெளிவில்
அது வரை
சொன்னது செய்தது எல்லாம்
குற்றமாகி குதறுவது..
நரகம்!

மரணித்த பின்
கணக்கு பார்த்து
இழுத்துச் சென்று
அடைக்கப்படும்
சித்திரவதைக் கூடமில்லை
நரகம்..

இருக்கும் போதே
இங்கேயே அது வரை
மயக்கிய போதை
அரைகுறையாக தெளிந்ததில்
உறைத்து உழல்வது…

வழி தெரியாமல்
முழி பிதுங்குவது…

மனதின் புகைச்சலை
தலை நனைத்தும்
உடல் நனைத்தும்
அனைக்க முடியாமல் தோற்பது..

தேய்த்தும மேலதிகம் தேய்த்தும்
நீங்காத அழுக்கில் அழுந்துவது…

குளித்தும் விடாது
துரத்தும் வீச்சம்
கூனிக் குறுக வைப்பது…